பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு

பாரீஸ், ஏப் 25- பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 20 ஆண்டு களில் 2-ஆவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அய்ரோப்பிய நாடு களில் ஒன்றான பிரான் ஸில், அதிபரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைய இருந்ததை யைடுத்து, அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 2ஆ-வது முறையாக போட்டியிட்ட இமானு வேல் மேக்ரான் உட்பட 12 வேட்பாளர்கள் களம் கண்டனர். கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், யாருக் கும் பெரும்பான்மை கிடைக் காததால் 2ஆ-ம் சுற்று வாக்குப்பதிவு 24.4.2022 அன்று நடந்தது.

புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பிரெஞ்ச் மக்க ளும் தங்களது வாக்கு களை செலுத்தினர். உட னடியாக வாக்குகள் எண் ணப்பட்ட நிலையில் இமானுவேல் மேக்ரானுக் கும், வலதுசாரி வேட்பா ளரான மரைன் லு பென் னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இமானுவேல் மேக்ரான் பெருவாரியான வாக்கு கள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப் பட்டார். 20 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதி பர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்றதால், ஈபிள் கோபுரம் அருகே அவரது ஆதரவாளர்கள் கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இமானுவேல் மேக்ரா னுக்கு கடும் சவாலாக திகழ்ந்த மரைன் லு பென், குறைந்த வாக்குகள் வித் தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனி டையே வாக்களித்தவர்க ளுக்கு நன்றி தெரிவித்த மேக்ரான், அடுத்த 5 ஆண்டுகளில் அனைவ ருக்கும் வளர்ச்சி தரும் திட்டங்களில் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2ஆவது முறையாக பிரான்ஸ் அதி பராகியுள்ள இமானு வேல் மேக் ரானுக்கு பல்வேறு நாட்டு தலை வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment