தமிழர் தலைவர் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செந்துறை ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

தமிழர் தலைவர் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செந்துறை ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்

செந்துறை, ஏப். 8-  அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் செந்துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில்3.4.2022 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. செந்துறை ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன் கடவுள் மறுப்பு கூறினார் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், தலைமையேற்க, மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன், மண்டல செயலாளர் சு. மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர்  

சி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

அரியலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் நிகழ்ச்சியில் தோழர்களின் பங்கேற்பு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட மேனாள் தலைவர் ஆறுமுகத்தின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தலைமை செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்து வதென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று அரியலூரில் நடை பெறவுள்ள நீட் எதிர்ப்பு ,புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு ,மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தில் மூன்று தனி வாகனங்களில் சென்று குடும்பம் குடும்பமாக பங்கேற்ப தென முடிவு செய்யப்படுகிறது.

இளைஞரணிச் செயலாளர் பொன்.செந்தில்குமார், செந்துறை ஒன்றிய தலைவர் மா. சங்கர், செந்துறை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.ராமச்சந்திரன், நகரத் தலைவர் ப. இளங்கோவன், சி.கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், திராவிடச் செல்வன்,சுப்புராயன். பொன்பரப்பி சுந்தரவடிவேல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment