ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., வாழ்த்து
சென்னை, ஏப். 3 திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் மாநில உரிமை மீட்புப் பயணம் - இந்தியாவுக்கே வழிகாட்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (2.4.2022) அவர் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கை வருமாறு:
'நீட்' தேர்வினைக் கைவிட வலி யுறுத்தியும், தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் அமைந்துள்ள புதிய குலக்கல்விக் கொள்கையின் கேடு களை விளக்கியும், ஒன்றிய அரசு பறித்து வைத்துள்ள மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும் வலி யுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், 03.04.2022 இல் நாகர்கோவிலில் தொடங்கி, 25.04.2022 இல் சென்னை யில் நிறைவு அடைய உள்ள விழிப் sபுணர்வு பிரச்சாரப் பெரும்பயணம் நடைபெற உள்ளது கண்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு முறை கரோனா தொற் றுக்கு ஆளாகி, உடல்நலம் குன்றிய நிலையையும் புறந்தள்ளிவிட்டு, 21 நாள்கள் பயணித்து 41 கூட்டங்களில் மக்களைச் சந்தித்து, திராவிட இயக்க இலட்சியங்களைப் பரப்பிடும் உன்னத மான பணியில் ஈடுபட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் விழிப்புணர்வை உருவாக்க உள்ள இந்த இலட்சியப் பயணம், அனைத்திந்திய அளவிலும் ஒரு தாக்கத்தை உருவாக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை!
நீட் தேர்வுக்கு, 20-க்கும் மேற்பட்ட இளம் தளிர்களை நாம் பலி தந்துவிட்டோம். இதன் பாதிப்பில் நம் இளைஞர்கள் இன்னமும் கண்ணீர் சிந்திடும் அவலம் தொடர்கிறது. இதற்குத் தீர்வு காணவேண்டிய மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன் றையும், ஒன்றிய அரசு திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. மாநி லத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் நம் இலட்சிய முழக்கம் நடைமுறையில் இல்லவே இல்லை!
இவற்றுக்கெல்லாம் தீர்வுகாண மக்களைத் தயார்படுத்தும் இந்தப் பிரச்சாரப் பயணம் முழுமையான வெற்றி பெறட்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ள தோழர்களுக்கும் நம் பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

No comments:
Post a Comment