காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு
கடந்த 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு டில்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க ஒன்றிய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் உறுப் பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், 2013 இல் தி.மு.க.வுக்கு, டில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது.
பின்னர், இங்கு தி.மு.க. அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டில்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் கடந்த டிசம்பரில் முடிவுற்றன. கடந்த ஜனவரியில் கட்டடத்தை திறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததால் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று (2.4.2022) மாலை 5 மணிக்கு அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கு அமைக்கப் பட்டிருந்த கொடி மரத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். மேலும், கட்டடத்தின் இரண்டு புறங்களில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா வின் சிலையை கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திறந்துவைத்தார். மேனாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை கட்சியின் பொருளாளரும், தி.மு.க. நாடாளு மன்றக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.
மொத்தமாக 8 ஆயிரம் சதுரஅடியில் 3 தளங் களுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தின் முதல் மாடியில் பேராசிரியர் க.அன்பழகன் நூலகம் அமைந் துள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந் துள்ள முரசொலி மாறன் அரங்கத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். இந்த விழாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஃபரூக் அப் துல்லா ஆகியோர் பங் கேற்று தொடங்கி வைத்தனர். விழாவில், அகிலேஷ் யாதவ், அமர் பட்நாயக், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் ரிணீக்ஷீuஸீணீஸீவீபீலீவீ - கி லிவீயீமீ என்ற புத்தகத்தை 'இந்து' என்.ராம் வெளியிட, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார். கி ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ யிஷீuக்ஷீஸீமீஹ் என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண் டார்.

No comments:
Post a Comment