தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் முகக்கவசத்திற்கு நிச்சயமாக பங்கு உள்ளது அய்.சி.எம்.ஆர் இயக்குநர் பிரியா ஆபிரகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் முகக்கவசத்திற்கு நிச்சயமாக பங்கு உள்ளது அய்.சி.எம்.ஆர் இயக்குநர் பிரியா ஆபிரகாம்

புனே, ஏப்.2 -தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் முகக்கவசத்திற்கு நிச்சயமாக பங்கு உள்ளது என்று அய்.சி.எம்.ஆர் இயக்குநர் பிரியா ஆபிரகாம் கூறி யுள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை கைவிட இன்னும் நேரம் வரவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் தேசிய வைராலஜி நிறுவனத்தின் அய்.சி.எம்.ஆர் என்.அய்.வி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆபிரகாம் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பிரியா ஆபிரகாம் கூறியதாவது, ‘நாட்டில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. இது நல்ல விஷயம். ஆனாலும் நெரிசல் மிகுந்த இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணியுங்கள். தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் முகக்கவசத்திற்கு நிச்சயமாக பங்கு உள்ளது.நாம் இன்னும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment