கொழும்பு,ஏப்.2- இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட வைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜ பக்சே, அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட் சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையை கொடுத்திருந்தார்கள். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதனிடையே இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அதிபர் மாளிகையை முற்றுகை யிட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது.இதனை யடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment