9.4.2022 அன்று திருவாரூரில் நடைபெற்ற 'நீட்' தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பெரும் பரப்புரை பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரையை கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். தமிழ் சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது? கல்வி நீரோடையை எப்படிப் பெற்றார்கள் - அதற்கு யார் யாரெல்லாம் காரணமாக இருந் தார்கள்? அப்படிப்பட்ட கல்வி உரிமை இப் போது தாங்கள் கூறியது போல கண்ணி வெடி வைத்துத் தகர்க்கப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு தங்களின் வயோதிகம், உடல் நலம் கருதாமல் இந்த சமுதாயம், எதிர்கால நம்முடைய பிள்ளைகளின் லட்சியக் கனவுகள் நிறைவேற தன்னலம் பாராமல் பிறர் நலனில் அக்கறை கொண்டு தந்தை பெரியாரின் வழியில் தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த பரப்புரை பெரும் பயணம் மக்கள் மத்தியில் ஒரு எழுச் சியை உருவாக்கும் என்பது என் நம்பிக்கை. தங்களின் உரையை ஆங்கங்கே நின்று கேட்ட பொது மக்கள் கூட்டம் முடிந்த பின் சரியாகத்தான் பேசுகின்றார் என்று கூறியதை கேட்கும் போது, அந்த எண்ணம் தோன்றியது.
அரசியல் கடந்து தொலைநோக்கு சிந்தனை யோடு - ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த புதிய மோசடி கல்விக் கொள்கையை பெற் றோர்கள் புரிந்துகொண்டு - அதை எதிர்த்துப் போராட தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில் தங்களின் உரையின் நிறைவில் கூறிய 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்ற கூற்று "சமூகநீதிக்கான முதல் குரல் வீரமணி தான்" என்பதை மீண்டும் உணர்த்தியது.
- பா. நாகராஜன்,
திருக்குவளை
No comments:
Post a Comment