- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

இறைச்சி விற்பனை செய் யும் இஸ்லாமியர் கடைகள் மீது பஜ்ரங் தள் கும்பல் தாக் குதல். மக்கள் இறைச்சி வாங்கக்கூடாது என மிரட்டல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

டில்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் சோனியா, அகிலேஷ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் டிஎம்சி சார்பில் மஹுவா மொய்த்ரா மற்றும் டிடிபி சார்பில் ராம்மோகன் நாயுடு மற்றும் கே ரவீந்திர குமார், சிபிஅய் சார்பில் டி ராஜா, பிஜேடி சார்பில் அமர் பட்நாயக், எஸ்ஏடி சார்பில் ஹர்சிம்ரத் பாதல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தி டெலிகிராப்:

மத அடையாளத்தில் கவனம் செலுத்துவது வளர்ச் சியை நிறுத்தும் என்கிறார் சரத் பவார்.

சமீபகால விலைவாசி உயர்வின் மூலம் நரேந்திர மோடி அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. தேர்தல் வெற்றிகளைக் கொள்ளையடிக்க உரிமமாகப் பயன்படுத்துகிறது என்றும் குற்றச்சாட்டு.

தி.மு..வின் டில்லி அலுவலகம் அக்கட்சியின் டில்லி தூதரகமாகும் என்கிறது தலையங்கச் செய்தி.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment