புதுச்சேரி, ஏப். 22- மொழிப் போர் தியாகி சுயமரியா தைச் சுடரொளி மயிலா டுதுறை நா.வடிவேல்
மருமகனும், சுதந்திர போராட்ட வீரர் நா.தன பால் மகனும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் "கழகச் செயல் வீரர்" என்று பாராட்டப் பட்டவருமாகிய பெரியார் பெருந்தொண் டர் சுயமரியாதைச் சுட ரொளி த.கண்ணன் அவர் களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 15. 4. 2022 அன்று புதுச் சேரி பெரியார் படிப்ப கத்தில் மாலை 6 மணி யளவில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமை தாங்க, கழக பேச்சாளர் யாழ். திலீபன் படத்தினை திறந்துவைத்து சிறப்புரை யாற்றினார். கண்ணன் அவர்களின் மூத்த மகன் க.வீரமணி வரவேற்புரை ஆற்றினார்.
கண்ணனின் அவர்க ளின் இணையர் பானுமதி கண்ணன், புதுச்சேரி மண் டல கழக செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி மண்டல கழக அமைப்பா ளர் இர. இராசு, புதுச்சேரி மேனாள் கழக செயலா ளர் வே.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினிராசு, ஆ. சிவ ராசன், வ.குலோத்துங்கன் குடந்தை, நெப்போலியன் மயிலாடுதுறை, மயிலாடு துறை திராவிடர் கழகம் மா-சே-துங், அண்ணா பேரவை புதுச்சேரி சிவ. இளங்கோ, ஒருங்கிணைப் பாளர் பெரியார் சிந்த னையாளர் இயக்கம் அ.சி.தீனா, சு.கோவிந்த ராஜ் பு.மனோகரன், இரா.பன்னீர்செல்வம் கதிராமங்கலம், கு. சுதா கர் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற் றினார்.
மேலும் கண்ணனின் மருமகள்கள் வீ.ஜீவிதா, செ.திவ்யா, குடும்ப உறுப் பினர் நெ.ஜெயலட்சுமி, இளைஞரணி தலைவர் தி.ராசா, மயிலாடுதுறை நாகரத்தினம், திலக் பிர சாத் ஆகியோரும் சிறப்பு ரையாற்றினர்.
தோழர்கள் அனைவ ரும் த.கண்ணனின் அவர் களின் 22 ஆண்டுகால கழகப் பணியினை வெகு வாக வியந்து பாராட்டி னர். கண்ணனின் சுயமரி யாதை, கழக செயல்பாடு கள், எளிமை, வறுமையி லும் நேர்மை, அன்புள் ளம் கொண்ட குழந்தை உள்ளம், குடும்பத்தினரை யும் பகுத்தறிவு பாதையில் அழைத்துச் சென்ற கழகத் தோழர், கொள்கையினை தாண்டி தனது குணத்தால் அனைவரை யும் ஈர்த்தவர் என்றெல் லாம் பாராட்டி அவரது நினைவுகளை போற்றி வீரவணக்கம் செய்தனர்.
இறுதியாக கண்ண னின் இளைய மகன் க.செல்லமணி நன்றியுரை ஆற்றினார்.
மேலும் விழாவில் கண்ணனின் சம்பந்தி ப.முத்துலட்சுமி, கு. குமாரி, ஜெ.வளர்மதி, ஜெ.பாலமுருகன், நெ. குடியரசு, நெ.மணியரசு, பழனிச்சாமி, இரா.இளம் பரிதி, மா.தேவிகா, மா.கல்பனா மிர்சா, மா.மதி வதனி, இள. கோவலன், லோ.பழனி, கா.நா.முத்து வேல், செ.இளங்கோவன், இரா. ஆதிநாராயணன், கோ.அல்போன்ஸ், கலை மாமணி. வி.பி.மாணிக்கம், பா.களஞ்சியம் வெங்க டேசன், செழியன், தி.ஆனந்தி, இ.சாம்பசிவம், மு.தமிழ்ச்செல்வன், ஆர். சுரேஷ்குமார், மு.ஆறு முகம், த. சக்திவேல், வெங் கட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் பிஞ்சுகள் வீ. ஆதித், செ. நிலானி, வீ. வியன், பா. யாழ் மித்ரன் மற்றும் பல கழகத் தோழர்கள், குடும்ப உறுப் பினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment