தஞ்சை, ஏப். 3- தஞ்சை கீழராசவீதி, பெரியார் இல்லத்தில் 26.2.2022 சனிக் கிழமை மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, குடந்தை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரை யாடல் கூட்டம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத் தொடக்கத்தில் மாநில ப.க.துணைத்தலைவர் கோபு. பழனி வேல், கடவுள் மறுப்பு கூறியும், கூட்டத் தின் நோக்கம், மாவட்டப் பொறுப் பாளர்களின் செயல்பாடுகள் மற்றும் கூட்டத்திற்கு வருகை தந்த அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ப.க. தலைவர் ந.காமராசு, மாவட்ட ப.க. துணைத்தலைவர் பேராசிரியர் முனை வர் பி.வி.ஆர்.வீரமணி, பட்டுக் கோட்டை மாவட்ட ப.க. தலைவர், ஆ.இரெத்தினசபாபதி, குடந்தை மாவட்ட ப.க.துணைத்தலைவர் க.திரு ஞானசம்பந்தம், மன்னை மாவட்ட ப.க.தலைவர், வை.கவுதமன், அரியலூர் மாவட்ட ப.க.தலைவர், நல்லாசிரியர் விருதுபெற்ற தங்க.சிவமூர்த்தி, பட்டுக் கோட்டை மாவட்ட ப.க.ஆசிரியரணி தலைவர் சு.நடராசன், பட்டுக்கோட்டை மாவட்ட ப.க.செயலாளர் புலவஞ்சி.இரா.காமராசு, மன்னை மாவட்ட ப.க ஆசிரியரணி செயலாளர் இரா. கோபால், பட்டுக்கோட்டை மாவட்ட ப.க.அமைப்பாளர் வீர.முருகேசன், தஞ்சை மாவட்ட ப.க.ஆசிரியரணி அமைப்பாளர் பேராசிரியர் கு.குட்டி மணி, அரியலூர் மாவட்ட ப.க ஆசிரி யரணி தலைவர் தா.பழூர் இரா.இரா சேந்திரன், மன்னை மாவட்ட ப.க. செயலாளர் உ.கல்யாணசுந்தரம், மன்னை நகர ப.க.தலைவர் கோவி.அழகிரி, தஞ்சை மாவட்ட ப.க ஆசிரி யரணி அமைப்பாளர் (கல்லூரி) பேராசி ரியர் முனைவர் இரா.மணிமேகலை, தஞ்சை பொறியாளர் ப.மனோகரன், திருவாரூர் மாவட்ட ப.க.தலைவர் சு.ஆறுமுகம், அய்யம்பேட்டை ஆசிரியர் ம.சுப்பிரமணியன், நெடுவாக்கோட்டை குழந்தை கவுதமன் தஞ்சை மாவட்ட ப.க.செயலாளர் ச.அழகிரி குடந்தை மாவட்ட அமைப்பாளர் முனைவர் ம.சேதுராமன் தஞ்சை மாநகர ப.க.செயலாளர் மா.இலக்குமணசாமி, அம்மாப்பேட்டை ஒன்றிய ப.க செயலாளர், ஜெ.பெரியார் கண்ணன், தஞ்சை தெற்கு ஒன்றியச்செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாந கர ப.க.தோழர் சாமி.கலைச்செல்வன், மாநகரசெயலாளர் கரந்தை அ.டேவிட், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மா.நாக ரெத்தினம், பாபநாசம் ப.க.தோழர் ராஜீவ்காந்தி, தஞ்சை களிமேடு ர.அரி கரசுதன், தஞ்சை மருவரசன், இ.த. பேரவை மாவட்டச் செயலாளர், புல வர் செல்ல கலைவாணன், உரத்தநாடு ஒன்றிய ப.க.தலைவர் நெடுவை.கு.நேரு, மாநில தி.க.கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மண்டல ப.க.ஆசிரியரணி அமைப்பாளர், சி.இரமேஷ், மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன், மாவட்ட திராவிடர் தொழிலாளரணி மாவட்டத் தலைவர் ச.சந்துரு, குடந்தை உ.ஆனந்தவள்ளி, மாநகர .அமைப்பாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், பட்டுக்கோட்டை நகர தலைவர் சிற்பி.வை.சேகர், அரிய லூர் மாவட்ட ப.க. ஆசிரியரணி ஆ. இரவி, அரியலூர் மாவட்ட தி.க.அமைப் பாளர் இரத்தின இராமச்சந்திரன், தஞ்சை மலரவன், பெரம்பலூர் மாவட்ட ப.க.தலைவர் பெ.நடராசன் ஆகியோரின் கருத்துரைக்குப் பின்,
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த தஞ்சை மாவட்டசெயலாளர் அ.அருண கிரி, பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரைய்யன், தஞ்சை மண்டலசெயலாளர் குடந்தை க.குருசாமி, தஞ்சை மண்டலதலைவர் மு.அய்யனார் மாநில பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் உரைக் குப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்களை வாசித்தப்பின், ப.க. பொதுச் செயலாளர் வி.மோகன் நமது எதிர்காலச் செயல்திட்டங்கள் பற்றியும், அமைப்பு விரிவாக்கம் பற்றி யும் எடுத்துக் கூறினார். நிறைவாக மாநில ப.க.தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் ப.க.மாநாடு, இதழ் சந்தா சேர்ப்பு, அமைப்பு விரிவாக்கம் பற்றியும், மாதந்தோறும் அரங்க நிகழ்ச்சிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் எடுத் துக் கூறி புதியப் பொறுப்பாளர்களை அறிவித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்;. அதோடு, இதுகாலம் வரை பொறுப்பில் இருந்து பணியாற்றிய தோழர்களை பாராட்டி ஆடை அணிவித்து மகிழ்வித்தார். நிறைவாக மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு நன்றி கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் விடைபெற்றுச் சென் றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம்:1
திராவிடர் கழக தஞ்சை மாநகரத் துணைத்தலைவர் ப.தேசிங்குவின் மறைவிற்கும் பெரியார் பெருந் தொண் டர் பெரம்பலூர் ஆறுமுகம் அவர்கள் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்:2
மாநில கலந்துரையாடல் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்கம் பெற்றிட தீவிரமாகக் களப்பணி ஆற்றுவது எனத் தீர்மா னிக்கப்படுகிறது.
தீர்மானம்:3
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை நீக்கிட தமிழ்நாடுஅரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவிப்பதோடு ‘நீட்’ நுழைவுத்தேர்வினை இந்த ஆண்டே தடுத்து நிறுத்திட வேண் டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்:4
எந்த வகையிலாவது புதிய கல்விக் கொள்கையை திணித்துவிட வேண்டும் என்று திட்டமிடும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இடம்கொடுக்காது தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பினை பாதுகாத்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை கட்டிக் காத்திட வேண் டும் என்று இக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்:5
கேரளா, கருநாடகத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினைப்போல் தமிழ்நாட்டிலும் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் நாடு அரசினை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்:6
மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கும் வகை யில் இந்திய அரசியல் சட்ட முகவுரை யில் கூறப்பட்டுள்ள ‘51’ - என்ற அமைப்பை ஏற்படுத்தி அறிவியல் நிகழ்ச்சிகளையும், மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சிகளையும் பள்ளி, கல்லூ ரிகளில் நடத்திடுவது எனத் தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம்:7
பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டினை செஞ்சியில் சிறப்பாக நடத்தி முடித்திட பங்கேற் றுள்ள மாவட்ட தஞ்சை மண்டலப் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் முழு ஒத்துழைப் பினை வழங்குவது எனத் தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம்:8
தந்தை பெரியார் வாழ்க்கை வர லாற்றை மாணவர்கள் அறியும் வகை யில் நடத்திடும் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியினை பகுத்தறிவாளர் கழகம் முன்னின்று நடத்துவது எனவும், புரட்சிக்கவிஞர்; கருத்துகளையும், திருவள்ளுவர் குறள் சிந்தனைகளையும் மாணவர்களிடம் கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்- 9
மாவட்டப் பொறுப்பாளர் அந்தந் தப் பகுதியில் உள்ள பகுத்தறிவுச் சிந் தனையுள்ள, முற்போக்காளர்களை அடையாளம் கண்டு துறைதோறும் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப் படுத்தி, நம் இயக்க இதழ்களை வழங்கி சந்தாக்கள் சேர்ப்பது எனவும், தொடர்ந்து “பெரியார் பேசுகிறார்” என்ற தொடர்களை நடத்திட வேண் டும் என தோழர்களை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்- 10
புதிய பொறுப்பாளர்கள்
தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
மாவட்டப்புரவலர் : வழக்குரைஞர்
எஸ்.எஸ்.இராஜ்குமார்
மாவட்டத்தலைவர் : ச.அழகிரி
துணைத்தலைவர் : ஜெ.பெரியார்கண்ணன்
மாவட்டச்செயலாளர் : பாவலர்பொன்னரசு
துணைச்செயலாளர் : தங்க.வெற்றிவேந்தன்
மாவட்ட அமைப்பாளர் : குழந்தைகவுதமன்
தஞ்சாவூர் மாநகரம்
மாவட்டத்தலைவர் : ப.மனோகரன்
துணைத்தலைவர் : பேராசிரியர். முனைவர் அ.சுப்ரமணியன், டி.எஸ்.சிவசண்முகம்,
மாநகரச்செயலாளர் : மா.இலக்குமணசாமி
துணைச்செயலாளர் : மூ.தமிழரசன், கை.மு.அறிவுச்செல்வன்
அமைப்பாளர் : சாமி.கலைச்செல்வன்
தஞ்சை ஒன்றியம்
தலைவர் : சோ.இராமகிருஷ்ணன்
செயலாளர் : நா.ரெங்கராசன்
அமைப்பாளர் : களிமேடு ர.ஹரிகரசுதன்
உரத்தநாடு ஒன்றியம்
தலைவர் : நெடுவை.கு.நேரு
செயலாளர் : வெ.கோபால்
அமைப்பாளர் : வீர.இளங்கோவன்
திருவோணம் ஒன்றியம்
அமைப்பாளர் : சி.நாகநாதன்
அம்மாப்பேட்டை ஒன்றியம்
தலைவர் : மா.சாமிநாதன்
செயலாளர் : ப.மாரிமுத்து
அமைப்பாளர் : துரை.தம்பிதுரை
திருவையாறு ஒன்றியம்
தலைவர் : தி.வ.செல்வகுமாரன்
செயலாளர் : க.இரணியன்
அமைப்பாளர் : இரா.தமிழரசன்
பூதலூர் ஒன்றியம்
தலைவர் : முனைவர்.ப.துரைராசன்
செயலாளர் : க.சிவசாமிபிரபு
அமைப்பாளர் : எம்.தாமோதரன்
கும்பகோணம் மாவட்டம்
மாவட்டத் தலைவர் : ஆடிட்டர் சு.சண்முகம்
செயலாளர் : முனைவர் சேதுராமன்
அமைப்பாளர் : க.திருஞானசம்பந்தம்
துணைச்செயலாளர் : உ.ஆனந்தவள்ளி
குடந்தை ஒன்றியம்
தலைவர் : ரெ.வைரமுடி
செயலாளர் : செல்வரசன்
வலங்கைமான் ஒன்றியம்
புரவலர் : வி.நடராசன்
தலைவர் : தெ.உத்தமன்காமராஜ்
துணைத்தலைவர் : எஸ்.கூத்தபெருமாள்
செயலாளர் : கோ.இரமேஷ்
துணைச்செயலாளர் : இராசேந்திரன்
அமைப்பாளர் : ஆர்.இந்திரஜித்
பாபநாசம் ஒன்றியம்
தலைவர் : மு.சேகர்
துணைத்தலைவர் : ம.சுப்ரமணியன் ஆசிரியர்
செயலாளர்: ஜெ.சங்கர்
துணைச்செயலாளர் : கோ.அறிவழகன்
அமைப்பாளர் : கோ.இராஜீவ்காந்தி
புரவலர்கள் : கு.ப.ஜெயராமன், க.கலிய மூர்த்தி, தா.இளவரசி, பெ.இராசேந்திரன்
பட்டுக்கோட்டை மாவட்டம்
மாவட்டத்தலைவர் : ஆ.இரத்தினசபாபதி
மாவட்டச்செயலாளர் : புலவஞ்சி இரா.காமராசு
மாவட்ட அமைப்பாளர் : வீர.முருகேசன்
பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் : வீ.வீரமணி.

No comments:
Post a Comment