தேசத் துரோக 124-ஏ சட்டப் பிரிவுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
தேசத் துரோக சட்டப் பிரிவு 124-ஏ-வை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பதாக - 124-ஏ-வை மறுபரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித் திருப்பதால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று ஆணையிட்டிருப்பதை ஜனநாயகவாதிகள் அனை வரும் வரவேற்பார்கள் என்பது உறுதி!
ஏற்கெனவே இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப் பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கும் தடை விதித்துள்ளதும் வரவேற்கவேண்டிய ஒன்றாகும்.
பிரிட்டிஷ் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட - விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தக் கருப்புச் சட்டத்தையே இந்த 75 ஆண்டுகால சுதந்திரத்திலும் இப்படி தொடருவது முறையல்ல; நியாயமல்ல என்ற நேர்மையான கோரிக்கை இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையின்மூலம் ஒரு புதிய ஒளியை - ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பாக அமைந்துள்ளது.
இதுபோல காலாவதியாக வேண்டிய காலனிய சட்டங்கள் பல உள்ளன; அவற்றிற்கும் இத்தகைய தடைகளை விதித்து, உண்மை சுதந்திர ஆட்சிக்கு 75 ஆண்டுகாலத்திற்குப் பிறகாவது விடியல் ஏற்படுத் தினால், தேவையற்ற அச்சுறுத்தல்கள் - கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்படாமல் தடுக்க முடியும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
11-05-2022
No comments:
Post a Comment