ஈரோடு, மே 11- ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் தகர கொட்டகை பறந்து விழுந்தது.
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கோவி லுக்கு முன்புறம் மற்றும் இடது புறத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. பலத்த காற்று வீசியதால் இந்த கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது. திடீர் கோடை மழை, சூறாவளிக்காற்றால் விவசாயிகள் சொல்லவொணாத்துயரை அடைந்துள்ளனர். தென்னை, வாழை மரங்கள் சாய்ந்துவிட்டதால் பெரும் இழப்புகளை விவசாயிகள் சந்தித்துள்ளனர். விவசாயம் உள்ளிட்ட பல் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

No comments:
Post a Comment