கை ரிக்ஷாவை ஒழித்த தமிழ்நாட்டில் மனிதனை மனிதர்கள் சுமக்கலாமா?
மன்னார்குடி ஜீயரை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்பு!
மன்னார்குடி, மே 8 தருமபுரம் பண்டார சன்னதியை மனிதர்கள் சுமக்கக் கூடாது- இது மனிதவதை - மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் குரல் கொடுத்து வருகிறது. மயிலாடுதுறை வட்டாட்சியர் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி ஆதினத்தின் பல்லக்குச் சவாரிக்குத் தடை விதித்தார். இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் - தடை விதித்தால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நடமாட முடியாது என்று கூறியுள்ளார். அதனைக் கண்டித்தும், கை ரிக்ஷா ஒழிக் கப்பட்ட மண்ணில் பட்டினப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதர்கள் சுமக்கும். இழி நிலையை அனுமதிக்கக் கூடாது என்றும் இன்று மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக மக்கள் முழக்கமிட்டனர். விவரம் வருமாறு:
தருமபுரம் ஆதினம் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் செல்வதை தமிழ்நாடு அரசு தடுத்தால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாட்டில் நடமாடமுடியாது என்று வன்முறையை, கலவரத்தைத் தூண்டும் வகையில் பத்திரிகையாளர்களிடம் - பொது வெளியில் பேசிய மன்னார்குடி செண்டலங்கார ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர் மண்டல திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில், இன்று (08.05.2022) காலை 11 மணியளவில், மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சு. சிங்காரவேலு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினர். மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், காப்பாளர் வெ.ஜெயராமன், மண்டல தலைவர் மு. அய்யனார், திருவாரூர் மண்டல தலைவர் கி. முருகையன், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, திருவாரூர் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், பட்டுக்கோட்டை கழக மாவட்டத் தலைவர் பெ.வீரையன், கும்பகோணம் கழக மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் ஆ.ச. குணசேகரன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், கும்பகோணம் கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஷ்குப்தா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிக்குமார், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர், அ.கலைச்செல்வி, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக துணை செயலாளர் உமாநாத், தஞ்சை மண்டல மாணவரணி செயலாளர் இரா.சற்குணம், திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் மு.இளமாறன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், கழக சொற்பொழிவாளர்கள் இராம. அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில தொழிலாளரணி துணை செயலாளர் மன்னை இரா.இரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பி.பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கோ.பாலசுப்பிரமணியன், மன்னை தி.மு.க. வழக்குரைஞர் சங்க கோ வீரகுமார், தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற பொதுச் செயலாளர் இரா. காமராசு ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இவ்வார்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாருர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட ஒத்த கருத்துள்ள தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பினர்.
இறுதியாக மன்னார்குடி கழக மாவட்ட துணை செயலாளர் விக்ரபாண்டியம் வீ.புட்பநாதன் நன்றி கூறினார்.
தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவாரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு , ம.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில தொழிலாளரணி துணைச் செயலாளர் இரா.இரமணி ஆகியோர் மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments:
Post a Comment