தமிழ்நாட்டில் மின்தேவை உயர்ந்தாலும் தடை இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது - அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

தமிழ்நாட்டில் மின்தேவை உயர்ந்தாலும் தடை இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது - அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை, மே 10 - தமிழ்நாட்டில் மின்தேவை உயர்ந்தாலும் எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை, அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு. கோடை காலத்தை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிறகு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: 2020ஆம் ஆண்டில் பூஜ்ஜியம் அளவுக்கு தான் 16,000 மெகாவாட்டிற்கு மேலான மின்நுகர்வு இருந்தது. 2021ஆம் ஆண்டில் 8 நாட்கள் 16 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் இருந்தது. நடப்பாண்டில் 17 நாட்கள் 16,000 மெகாவாட்டிற்கு மேல் மின்நுகர்வு இருந்தது. எட்டு நாட்களில் 6 நாட்கள் 16,000 மெகாவாட்டிற்கு மேல் அதிகபட்ச மின்நுகர்வு பயன்படுத் தப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட தற்போது கூடுதலான மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஏற்கெ னவே இருந்த 7.67 கோடி யூனிட் என்பது தற்போது 8.13கோடி யூனிட் டாக உயர்ந்துள்ளது.

அப்படி உயர்ந்தாலும் கூட எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டில் முதலமைச்சர் எடுத்த பல் வேறு வழிகாட்டுதல்களின் காரணமாக நம்முடைய மின்சார வாரியம் மே 1ஆம் தேதி 1.44 லட்சம் யூனிட் வெளிமாநிலங் களுக்கு கொடுத்துள்ளோம். தமிழ் நாட்டில் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு மின்விநியோகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த இடங்களிலாவது மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டால் அது ஏதாவது பரா மரிப்பு பணியின் காரணமாக இருக்க லாம் அல்லது இடையில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் மிகச்சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங் களை விட தற்போது சுய மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. புனல் மின் உற்பத்தியை பொறுத்தவரைக்கும் ஒன் றிய அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட நாம் 16% உற்பத்தியை அதிகரித் துள்ளோம். மேலும் 3 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு ஏப்ரல், மே மாதங் களுக்கு குறுகிய கால ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதன்மூலம் மின்சாரம் பெற்று நாம் விநியோகம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங் கப்படும். வாடகை வீட்டில் இருப்ப வர்கள் எங்களுக்கு தனியாக இணைப்பு வேண்டும் என கேட்டால், அவர்களுக்கு வழங்கப்படும். மின்வாரியத்தின் வர லாற்றிலேயே இரண்டு ஆண்டுகளில் 116 துணை மின்நிலையங்கள் அமைப் பது முதல்முறையாகும். ஓராண்டில் 24,036 புதிய மின்மாற்றிகள் அமைக்கப் பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.


No comments:

Post a Comment