இதென்ன மாடல்?
செய்தி: கொலையாளியைக் கொண்டாடும் திராவிட மாடல்!
- 'துக்ளக்' தலையங்கம், 1.6.2022
சிந்தனை: காந்தியார் கொலைக்கு மூளையாக இருந்த சாவர்க்கர் படத்தையும், கொலை செய்யப்பட்ட காந்தியாரையும் நாடாளுமன்றத்தில் அலங்கரித் திருப்பது ''ஆரிய மாடலோ!''
கேள்வி: ''தி.மு.க. ஆட்சியில் வன்முறைகள் இல்லை. மத மோதல்கள் இல்லை. ஜாதிச் சண்டைகள் இல்லை. துப்பாக்கிச் சூடுகளும் இல்லை'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில்: இப்படி உயர்ந்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சியைப்பற்றி அவரே புகழ்ந்து பேசி, அவர் கண்ணே பட்டு விடக் கூடாதே என்ற கவலை நமக்கு.
- 'துக்ளக்', 1.6.2022
சிந்தனை: பிரதமர் மோடி தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிக்கிறாரே, அப்பொழுது அவர் 'காலே' பட்டுவிடுமோ!
கேள்வி: நடந்து சென்றால் என்ன குடி முழுகிப் போய்விடும்? 'அடக்கம் தானே மதத்தின் அடிப்படை' என்று தர்மபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் குறித்து ஆன்மிகப் பேச்சாளர் சுகிசிவம் தெரிவித்துள்ள கருத்துபற்றி?
பதில்: சுகிசிவம், கழக சித்தாந்த பேச்சாளர். ஆன்மிகப் பேச்சாளர் என்று அவமானப்படுத்தாதீர்கள்.
- 'துக்ளக்', 1.6.2022
சிந்தனை: என்ன செய்வது! சுகிசிவம் தோளில் பூணூல் இல்லையே! 'ஓ, அடக்கம்தானே மதத்தின் அடிப்படை' என்று வேறு சுகிசிவம் சொல்லிவிட்டாரே! கோபம் பொத்துக்கொண்டு வராதா இந்தச் சங்கி களுக்கு?
கேள்வி: 'ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானி பூரி வியாபாரம் செய்துகொண்டு இருக்கின்றனர்' என்ற அமைச்சர் பொன்முடியின் பேச்சைப் பற்றி?
பதில்: ஹிந்தி வேண்டாம் என்று தி.மு.க. கூறினாலும், ஹிந்தி பேசுபவர்கள் செய்யும் ருசியான பானி பூரி வேண்டும் என்கிறார்கள் தமிழ் மக்கள்.
- 'துக்ளக்', 1.6.2022
சிந்தனை: முனியாண்டி ஓட்டலில் கூடத்தான் பார்ப்பனர்கள் சாப்பிடுகிறார்கள். அதனால் பார்ப் பனர்கள் 'சைவர்கள்' ஆகிவிட்டார்கள் என்று அர்த்தமா?
ஓ, மறந்துவிட்டதே! பட்டதாரிகள் பகோடா விற்கலாமே என்றாரே பிரதமர் மோடி, அதனை மறந்துவிட்டார்களா ஹிந்தி தெரிந்தவர்கள்?

No comments:
Post a Comment