செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 வஞ்சனை

  • அனைவருக்கும் சம வாய்ப்பை 'நீட்' வழங்கி யுள்ளது.

- அண்ணாமலை, பி.ஜே.பி.

>> சமநிலை இல்லாத சமூகத்தில் சம வாய்ப்பு என்பது வஞ்சிக்கும் வேலை!

வீ(சோ)ர சாவர்க்கார்

  • வீர சாவர்க்கார் போன்ற புரட்சியாளர் - எழுத்தாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை வழங்கவில்லை.

- ஆதித்யநாத், உ.பி. முதலமைச்சர்

>> ''மன்னிப்புப் புகழ் மாமன்னன்!'' என்ற விருதை காங்கிரஸ் வழங்கிக் கவுரவித்திருக்கலாம்.

புரட்சிக்கவிஞர்!

  • ஒரு பாரதியார் இல்லையென்றால் ஒரு பாரதிதாசன் கிடைத்திருக்கமாட்டார்.

- 'தினமணி' கட்டுரை

>> பாரதியின் கவிதை நடை பாரதிதாசனைப் பாதித்து இருக்கலாம். ஆனால், கருப்பொருளும், கருத்தாழமும் தந்தை பெரியாரின் தாக்கத்தினால்தான் ஒரு புரட்சிக்கவிஞரை உருவாக்கிற்று!

'நெகட்டிவ்'

  • கடந்த 8 ஆண்டுகளில் தலைக்குனிவை ஏற்படுத்தும் தவறுகள் நடக்கவில்லை.

- பிரதமர் மோடி

>> ஏன்  இப்படியொரு நெகட்டிவ் சிந்தனை?

அறிவிப்பு?

  • இரயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்கள் ரத்து.

>> நம்புங்கள், மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு- மோடி அறிவித்தாரே!



No comments:

Post a Comment