கடற்படைத் தளத்தில் ராஜபக்சே தஞ்சம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

கடற்படைத் தளத்தில் ராஜபக்சே தஞ்சம்

கொழும்பு, மே 11- இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி யாக போராட்டத்தை நடத்தி வரு கின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரி, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமர் பதவியிலி ருந்து விலகிய மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரையும் ராணுவத் தினர் மீட்டு திரிகோணமலை கடற் படை தளத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். இதையறிந்த மக்கள் அங்கும் திரண்டு போராட்டம் நடத்தினர்.

அமைதிவழிப் போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றிய ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் 

அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகைக்கு எதிரே காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, மகிந்த ராஜபக் சேவின் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் (9.5.2022) திடீர் தாக்குதல் நடத் தினர். போராட்டக்காரர்களை வெளி யேற்ற ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது. இதற்கு போராட்டக்காரர்களும் எதிர் வினையாற்ற, இலங்கையின் பல பகுதி களிலும் கலவரம் பரவியது.

மேனாள் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என 41 பேரின் வீடுகள் மற்றும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக் கப்பட்டன. 

ஆளும் சிறீலங்கா பொதுஜன பெர முன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்  அமரகீர்த்தி அத்துகோரள நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் இன்று காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராணுவம், காவல்துறை குவிக்கப்பட்டும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்த னர். கலவரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து  பிரதமர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனாலும் கொழும்புவில் உள்ள பிரதமர் இல் லத்தை சுற்றிவளைத்து போராட்டக் காரர்கள் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவானது.

இதையடுத்து அவரையும், அவரது மனைவி ஷிராந்தி, இளைய மகன் ரோகிதா உள்ளிட்ட குடும்பத்தின ரையும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நேற்று அதிகாலை மீட்ட ராணு வத்தினர், திரிகோணமலை கடற்படை தளத்துக்கு கொண்டு சென்று பாது காப்பாக தங்க வைத்தனர். இதையறிந்த மக்கள் அங்கும் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே மேதமுலான, குரு நெகலா ஆகிய பகுதிகளில் உள்ள ராஜ பக்சேவுக்கும், அவரது குடும்பத்தினருக் கும் சொந்தமான வீடுகளையும் ராஜ பக்சே தந்தையின் நினைவிடத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித் தனர். போராட்டக்கார்களால் ராஜபக் சேவின் தந்தை உருவச்சிலை தகர்க்கப் பட்டது.

இந்நிலையில் ராஜபக்சேவின் 2ஆவது மகன் யோஷிதா மற்றும் அவரது குடும் பத்தினர் நேற்று முன்தினமே நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜ பக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க கொழும்பு பண்டார நாயகே பன்னாட்டு விமான நிலையம் செல்லும் சாலைகளில் போராட்டக் காரர்கள் சோதனைச் சாவடி அமைத்து சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இடைக்கால அரசு அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் கோத்தபய ராஜபக்ச விடுத்த அழைப்பை, முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. நிராகரித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிமன்றத்தின் பிடியாணை இல் லாமலேயே போராட்டக்காரர்களை கைது செய்து விசாரிக்கவும், அவர்களது வீடுகள், வாகனங்களில் சோதனை நடத் தவும் ராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளார் அதிபர் கோத்தபய.

இலங்கையின் ஜனநாயகம், நிலைப் புத்தன்மை, பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று (11.5.2022) கூறும்போது, “இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான வழிமுறைகளைக் கண்டு இலங்கைக்கு இந்தியா உதவும். இலங்கையின் நெருங் கிய அண்டை நாடாக, பல நூற்றாண்டு கால உறவு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு ஜனநாயகம், நிலைப்புத்தன்மை, பொருளாதார மீட்சி திரும்புவதற்காக இந்தியா தனது முழுமையான ஆதரவை அளிக்கிறது. இலங்கையில் பொருளா தார மீட்சி ஏற்படுவதற்காக கடந்த மாதம் ரூ.11,400 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. மேலும் உணவு, மருந்து பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது” என்றார்.

உரிமைக்காக போராடியவர்களை மட்டுமல்லாமல், ஏதுமறியாத அப்பாவி தமிழர்களையும் ஓரிடத்தில் குவித்து கொன்றொழித்த இனப்படுகொலை செய்த ராஜபக்சே தற்பொழுது தன்னுயிரைக்காத்துக்கொள்ள ஓடிக் கொண் டிருக்கிறார். இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள் சூழல்குறித்து சமூக ஊட கங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. 

No comments:

Post a Comment