மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் வகையில் சிறப்பாக சட்டப்பேரவை நிகழ்வுகள் அமைந்தது சட்டப் பேரவைத்தலைவர் புகழாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் வகையில் சிறப்பாக சட்டப்பேரவை நிகழ்வுகள் அமைந்தது சட்டப் பேரவைத்தலைவர் புகழாரம்

சென்னை, மே 11- முதலமைச் சரும் எதிர்க்கட்சி தலை வரும் மக்களுக்கு பயனுள் ளவகையில் விவாதம் நடத்தினர். மக்களாட்சி யின் மாண்புகளைக் காக் கும் முறைப்படி சட்ட சபை நடந்துள்ளது என, பலரும் பாராட்டுகின் றனர்,'' என, சட்டப் பேர வைத்தலைவர் மு.அப் பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 22 நாட்கள் நடந்தது. இதில், 158 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, 48 மணி 26 நிமிடங்கள் பேசினர். 

ஆளும் கட்சியினர் 84 பேர், 22 மணி 47 நிமிட மும், மற்ற கட்சியினர் 74 பேர், 25 மணி 39 நிமிட மும் பேசினர். மற்ற கட்சியினருக்கு, கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலமைச்சர் தன் துறை தொடர்பாக, 58 நிமிடம் விளக்கம் அளித் தார். இதுமட்டுமின்றி 26 துறைகளுக்கு, 36 நிமிடம் பதில் அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் கள் தாயகம் கவி, ஜி.கே.மணி, பிரபாகர் ராஜா, அருள், சிவகுமார் ஆகி யோர், அதிக கேள்விகளை கொடுத்தனர். 

அதிக கேள்விகளுக்கு, அமைச்சர்கள் க.பொன் முடி, செந்தில் பாலாஜி, மெய்யநாதன், தங்கம் தென்னரசு, துரைமுரு கன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பதில் அளித்துள்ளனர்.

இந்த கூட்டத்தொட ரில் 14 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு விலக்கு, புதிய சித்த மருத் துவ பல்கலை உள்ளிட்ட 46 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சட்டசபையில் காகிதம் இல்லாத பட் ஜெட் தாக்கல் செய்வ தற்கு, கணினிகள் பயன் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே போல, 'சட்டசபை நிகழ்ச் சிகள் நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படும்' என, முதலமைச்சர் அறிவித் தார்.

இதற்காக, அதிகாரி கள் பல்வேறு மாநிலங்க ளுக்கு ஆய்வுக்கு சென்ற னர். கேரளாவில் கேள்வி- - பதில் மட்டுமே ஒளி பரப்பு செய்யப்படுகிறது. கோவா, டில்லி, தெலுங் கானாவில் முழுமையாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு செய் யப்படுகிறது. முழுமை யாக சபை நடவடிக்கை களை ஒளிபரப்ப நட வடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சிகள், தங்கள் ஆட்சியின் சாதனை களை சொல்லி, பிரச்சி னைகள் குறித்தும் பேசினர். 

முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் ஆரோக் கியமான விவாதம் நடத் தினர். ஓராண்டு காலமாக சபை நாகரிகமாக நடந் திருப்பதற்கு முதலமைச் சர் முதல் காரணம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர். அதனால் தான், ஜன நாயக முறைப்படி சட்ட சபை நடந்துள்ளது என, பலரும் பாராட்டுகின் றனர்.இவ்வாறு சட்டப் பேரவைத்தலைவர் பேசினார்.

No comments:

Post a Comment