புதுடில்லி, மே 11- சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் ஆக்கி ரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் உள் ளிட்ட கட்டடங்களை அகற்றக்கூடாது என்றும் அதற்கு தடை விதிக்குமா றும் கோரிய வழக்கின் மீதான விசாரணையில் நேற்று (10.5.2022) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியது. ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை என்றும், ஆக்கிரமிப்பு அகற்றம்குறித்து அறிக் கையை மாநில அரசு அளிக்க வேண்டும் என் றும் குறிப்பிட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசா ரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர் வில் நேற்று (10.5.2022)நடைபெற்றது. இந்த விவகாரத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகி றது. அதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நாங் கள் மாநில அரசின் நட வடிக்கைகளை நிறுத்த போவதில்லை. சம்பந்தப் பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அர சின் வேலை, அதை அவர் கள் செய்யட்டும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவ தில்லை. மேலும் ஆக்கிர மிப்பு அகற்றம் விவகா ரத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் காலி செய்வதற்கு குறிப்பிட்ட காலம் அவ காசம் வழங்கியிருந்தால் அதை அவர்கள் கடைப் பிடிக்க வேண்டும். ஒரு உத்தரவை அமல்படுத்து வது அரசின் கடமை, அதை தானே முதலமைச் சர் செய்து வருகிறார் என்று தெரிவித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது:
முதலில் ஆக்கிரமிப்பு களை அகற்றுவது தொடர் பான தாக்கீதைப் பெற்று கொள்ளுங்கள். வேண்டுமெனில் நாங்கள் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அறிவுறுத் தல் வழங்குகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு விஷயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்க வேண்டும். அமல்படுத்தப் பட வேண்டும். தற்போது முதலமைச்சர் சட்டப் பேரவையில் மாற்று இடம் தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என கூறுகிறீர்கள்.
எனவே அது உறுதி மொழி தானே அவ்வாறு தெரிவித்திருப்பது சாதாரண விஷயம் கிடை யாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க போவதில்லை. ஏற்கெனவே பல குடும்பம் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக் கின்றனர்? முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறிய தில் இருந்து அவர் இந்த விவகாரத்தில் விழிப்பு ணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது.
உரிய பாதுகாப்பை பயன்படுத்துங்கள், ஆக் கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக எங்கள் உத் தரவை அமல்படுத்துங் கள். அதேவேளையில், சம்பந்தப்பட்ட நபர்க ளுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும் பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு இந்த மனுதாரர்களை மாற்றலாம். மேலும் அடிப் படை வசதிகளையும் இந்த மக்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண் டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப் புகளை அகற்ற வேண்டு மென கடந்த 2011இல் நீதிமன்றம் பிறப்பித்த உத் தரவை தடுத்து நிறுத்தும் நோக்கிலானது என்றே கருதுகிறோம். எனவே ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக் கால மனுக்கள் அனைத் தையும் தள்ளுபடி செய் கிறோம். அதேவேளை யில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வில்லை என்று தொடரப் பட்ட நீதிமன்ற அவம திப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்றைய நாள் ஆக்கிரமிப்பு அகற் றம், மாற்று இடம் தொடர் பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment