சென்னை, மே 11- அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள் பற்றி எந்த சுற்ற றிக்கையும் வெளியிடவில்லை என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்கள், மே மாதத் திற்குப் பிறகு பணிக்கு வர வேண் டாம் என தெரிவிக்கப் பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர்
க.பொன்முடி, பணிக்கு வர வேண்டாம் என்று தொகுப்பு ஊதிய ஊழியர்களுக்கு எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றார். மேலும் எதிர்காலத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment