டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
அய்தராபாத் நகரை விட்டு தொகுதிக்கு சென்று மக்களை சந்தியுங்கள், தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்.
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு எரிவாயு உருளை ரூ.1015ஆக விற்பனையாகிறது. மோடி அரசின் மிகப் பெரிய கொள்ளை என மம்தா குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
பாபர் மசூதிக்கு அடுத்து, வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் சிவில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் இரண்டு நாள் கணக் கெடுப்பு சர்ச்சையைத் தூண்டியுள்ளது, குழுவில் உள்ள ஹிந்து உறுப்பினர்கள் கோவிலின் இடிபாடுகளைக் காண தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது மற்றும் உள்ளூர் முஸ்லிம்கள் பயிற்சியை எதிர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால் 5.5.2022 அன்று மாலை அனுப்பப்பட்டு, 48 மணி நேரத்தில் மோடி அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல பரிந்துரைகளை பல மாதங்கள் இழுத்தடிப்பு செய்த மோடி அரசு, இந்த இரு நீதிபதிகள் பரிந்துரையில் இவ்வளவு வேகமாக செயலாற்றியுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment