புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா!

பெண்ணாடத்தில் 29.4.2022 அன்று மாலை பகுத்தறிவாளர் கழக அலுவலகத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. முதலில் புரட்சிக் கவிஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தா.கோ.சம்பந்தம் (விடுதலை வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், அ.பச்சமுத்து "கடவுள் மறுப்பு" உறுதி மொழியை கூறினார். நகர கழக அமைப்பாளர் ந.சுப்பிரமணியன் வரவேற்று உரையாற்றினார். தா.கோ.சம்பந்தம், நிகழ்வில் பாரதிதாசனின் மறக்க முடியாத "மனிதம்" காத்த நிகழ்ச்சியை எடுத்து சொன்னார். பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம் "பேசு சுயமரியாதை உலகு எனப் பேர் வைப்போம்! ஈதேகான்! சமுகமே, யாம சொன்ன வழியில் ஏறுநீ ஏறுநீ ஏறுநீ ஏறே! என்று "முன்னேறு" கவிதையை விளக்கிப் பேசினார்.

"புரட்சி கவிஞரின் பொதுமை" என்ற தலைப்பில் முருகன்குடி பழனிவேல் உரையாற்றினார். திருக்குறள் மய்ய மாவட்ட செயலாளர் பூவை.ஜெயராமன் பாவேந்தரின் "இளமை பருவம்" பற்றி பேசினார். செந்துறை (வடக்கு) ஒன்றிய செயலாளர் எம்.ஞானமூர்த்தி சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவது போல் பல்வேறு தகவல்களை விளக்கி பேசினார். நகர கழக செயலாளர் செம்பேரி இராசேந்திரன் நன்றியுரையாற்றினார்.


No comments:

Post a Comment