எழுச்சியுடன் நடந்த மதுரை கலந்துரையாடல் கூட்டம் - தீர்மானங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

எழுச்சியுடன் நடந்த மதுரை கலந்துரையாடல் கூட்டம் - தீர்மானங்கள்!

மதுரை, மே 30  மதுரை மாநகர், புறநகர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.05.2022,மாலை 6 மணியளவில் மதுரை மேலமாசி-தெற்குமாசி சந்திப்பில் உள்ள கம்மவார் நாயுடு மஹாஜன சங்க அரங்கத்தில் நடை பெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்கினார்.அனை வரையும் வரவேற்று மாநகர் மாவட்ட செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம் உரையாற்றினார்.

நிகழ்விற்கு திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, காப்பாளர் சே.முனியசாமி,புற நகர் மாவட்ட தலைவர் சுப.தனபாலன், மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனை வர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

நிகழ்வின் நோக்கம் குறித்தும், நமது இயக்கத்தின், நமது தமிழர் தலைவர் அவர்களின் சிறப்பு குறித்தும் உரையாற்றி, மதுரையில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம்,அன்று மாலையில் நடைபெற இருக்கும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடை பெற இன்றுமுதல் களப் பணியை ஆரம்பியுங்கள் என்று திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் உரையாற்றினார்.

மதுரையில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றை குறிப்பிட்டு, அரியலூரில் நடைபெற இருக்கும் மாநில இளைஞர் அணி மாநாடு, செஞ்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக மாநாடு எனத் தொடர்ந்து மாநாடுகள் நடப்பதை சுட்டிக்காட்டி, ஆசிரியர் அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் நிலையிலும், கழகப்பணிகள் தொய்வின்றி நடப்பதையும், பெரியார் பிஞ்சு பயிற்சி முகாம் போன்றவை சிறப்பாக நடந்ததையும் சுட்டிக்காட்டிப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்.

தொடர்ந்து மாநில அமைப்புச்செயலாளர் மதுரை வே.செல்வம், நமது தலைவர் அவர்கள் எந்தப்பணியைக் கொடுத் தாலும் மதுரை தோழர்களின் ஒத்துழைப்போடு மிகச்சிறப் பாகச் செய்வோம். அந்த வகையில் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தையும்,மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத் தையும் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டுவோம் என்றார்.

வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், மண்டலத் தலைவர் கா.சிவகுருநாதன், மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.பால்ராஜ், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அல்லிராணி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பொறியாளர் இராமச்சந்திரன், பெரி.காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

மதுரையில் ஆசிரியர் அவர்களின் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்த உதவிய தோழர்களுக்கு பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

சிறப்புரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், "மதுரை என்றவுடன் எனக்கு எனது சிறுவயது நினைவுதான் வருகிறது. அய்யா நீர்காத்தலிங்கம், அண்ணன் எடிசன் அவர்களின் தந்தை அய்யா தேவசகாயம் போன்ற வர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றார்கள். மதுரை எனக்கு மிகப்பிடித்த ஊர், சென்னையைவிட. மதுரையில் நமது கழக நிகழ்வுகள் பல சிறப்பாக நடைபெற்றுள்ளன.  நமது பரம்பரை எதிரிகளான பி.ஜே.பி. வளர்ந்து வருவது போலத் தோற்றம் காட்ட முயல்கின்றனர்.அது வெறும் கானல் நீர் போன்ற தோற்றம். அவர்கள் எப்படிப்பட்டவர்களைக் கட்சியில் சேர்க்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். நமது இயக்கம் ஆரம்பித்தும் 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. அவர்களது இயக்கம் ஆரம்பித்தும் 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. அவர்களது இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இரண்டு முறை தடை செய்யப்பட்ட இயக்கம். நாம் அப்படி அல்ல. எப்போதும் தடை செய்யப்படாத இயக்கம் என்பது மட்டுமல்ல, எல்லா வற்றையும் வெளிப்படையாக அறிவித்து செயல்படுத்தும் இயக்கம்.

நமது இயக்கம் நோக்கி,நமது பெரியாரியல் கொள்கை நோக்கி நிறைய இளைஞர்கள்,பெண்கள் வருகின்றார்கள். நம்மிடம் இருப்பவர்கள் எளியவர்கள்,சாதாரண வேலையில் இருப்பவர்களாக இருந்தாலும் உணர்வு மிக்கவர்கள். ஆசிரியர் அவர்களின் உடல் நிலை கருதி அவரின் சுற்றுப் பயணத்தைக் குறைக்கிறோம். அந்த வகையில் மதுரை மாவட் டத்தைச்சார்ந்தவர்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.மிக,மிக அவசியம் என்றால் மட்டுமே அய்யா ஆசிரியர் அவர்களின் தேதி கேட்பீர்கள்.ஆனால் வருகின்ற ஜூன்-7 தொடங்கி தொடர்ச்சியாக ஆசிரியர் அவர்கள் தென்மாவட்டங்களில்தான் இருக்கப்போகிறார். 12 ஆம் தேதி வரை தொடர்ச்சியான  நிகழ்ச்சி. ஆனால் ஆசிரியர் அவர் களுக்கு அதில்தான் மகிழ்ச்சி.

ஆசிரியர் அவர்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்.இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டதுபோல தொடர்ச்சியாக இயக்க வேலைகள் நடைபெறுகின்றன.பெரியார் பிஞ்சுகள் பயிற்சி முகாம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. ஆசிரியர் அவர் களைக் காணொலியில் கலந்து கொண்டு பேசவைத்தோம். புத்தகச் சந்தைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இப்படித்தொடர்ச்சியான வேலைகள் நம் இயக்கத்தின் சார்பாக நடைபெறுகின்றன.

உசிலம்பட்டியில் நடைபெறும் கூட்டத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யுங்கள். ஆசிரியர் அவர்கள் அங்கு கலந்து கொண்டு பேசுவதை மிக விரும்புகிறார்.மதுரையில் நடைபெறும் பொதுக்குழு,பொதுக்குழுத் தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவோம்.நான் பொதுக் குழு நடப்பதற்கு முதல் நாளே வந்து விடுகின்றேன்.அதற்கான வேலைகளை இப்போதிருந்தே ஆரம்பியுங்கள் " என்று தோழர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையை ஆற்றினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் மண்டலச்செயலாளர் நா.முருகேசன், பெரியார் பெருந்தொண்டர் கேசவன், இளைஞர் அணி தலைவர் பேக்கரி கண்ணன், புற நகர் தலைவர் முத்துக்கருப்பன், அமைப்பாளர் பாலா,திராவிடர் கழக மதுரை மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் பவுன்ராஜ், துணைச்செயலாளர் சுரேஷ், புற நகர் மாவட்டத் துணைத் தலைவர் எழுமலை சிங்கராசு, விராட்டிபத்து சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் எண் 1: 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 

நன்றியும் வரவேற்பும்!

25.06.2022 அன்று மதுரை மாநகரில் திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தினை நடத்துவதற்கு வாய்ப்பினை நல்கிய தமிழர் தலைவர் அவர்களுக்கு மதுரை திராவிடர் கழகம் தனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது.பொதுக்குழுவில் பங்கேற்க வருகைதரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 2: 

பொதுக்குழுவை சிறப்புடன் நடத்துதல்-தீர்மான விளக்கப்பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது

25.06.2022 காலை மாநிலப் பொதுக்குழுவை சீரோடும் சிறப்புடனும் நடத்துவது என்றும்,அன்று மாலை நடைபெறும் பொதுக்குழு தீர்மான விளக்கப்பொதுக்கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.கொடித்தோரணங்கள், மின் விளக்கு அலங்காரம், வண்ண சுவரொட்டிகள், வரவேற்பு சுவரொட்டிகள், சுவரெழுத்து ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் பரவலாகச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 3: 

ஜீன் 8,9,10,11 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற வுள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு மதுரை மாநகர், புறநகர் மாவட்டங்களிலிருந்து இளைஞர்களை, மாணவர் களைத் திரளாக அனுப்புவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 4: 

ஜூன் 8 ஆம் தேதி உசிலம்பட்டிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப் பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 5: 

பொதுக்குழு -தீர்மான விளக்கப்பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் கீழ்க்கண்ட குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

பொதுக்குழு- தீர்மானப்பொதுக்கூட்ட அனைத்து பணி களையும் ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவர் 

தே.எடிசன்ராசா

துணைத் தலைவர்கள்: முனைவர் வா.நேரு, 

அ..முருகானந்தம், சே.முனியசாமி, சுப.தனபாலன்

ஒருங்கிணைப்புக்  குழுவின் செயலாளர் வே.செல்வம்

துணைச்செயலாளர்கள்:

மு.சித்தார்த்தன், நா.கணேசன், த.மா.எரிமலை

ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் : சுப.முரு கானந்தம்.

வசூல் குழு

வே.செல்வம்,நா.முருகேசன்,சுப.முருகானந்தம்,

ஓ.ராமச்சந்திரன்

கடைத்தெரு வசூல் குழு

பெரி.காளியப்பன், க.சிவா, பேக்கரி கண்ணன், 

பொ.பவுன்ராசா, ஆட்டோ செல்வம், வேல்துரை, காசி, 

கு.மாரி முத்து, போட்டோ இராதா.

நோட்புக் அரங்கம் மேடை நிர்வாகம்

சுப.முருகானந்தம், பா.சடகோபன், கோரா.

விருந்தோம்பல்- உணவுக்கூட மேலாண்மைக்குழு

இரா.திருப்பதி, இரா.இளங்கோவன், பெ.தனசேகரன், அ.இராசா,பா.முத்துக்கருப்பன்,  ந.இராசேந்திரன், சோ.சுப் பையா, கோ.கு.கணேசன், க.பிச்சைப்பாண்டி, விடுதலை செல் வம், இரா.முத்தையா, ரோ.கணேசன், து.சந்திரன், இரா.மணி கண்டன், ப.காசி.

கொடிகள் கட்டுவது-மேற்பார்வை

கா.சிவகுருநாதன், த.மா.எரிமலை, பா.முத்துக்கருப்பன்

விடுதி மேற்பார்வை-  இரா.லீ.சுரேசு

பொதுக்கூட்ட மேற்பார்வை

சுப.முருகானந்தம், த.மா.எரிமலை, வண்டியூர் கிருஷ்ண மூர்த்தி, மணிராஜ், தனுஷ்கோடி, பொ.பவுன்ராசா, அ.மன்னர் மன்னன், செல்ல கிருட்டிணன், விரகனூர் கணேசன்.


No comments:

Post a Comment