விழுப்புரம், மே 11- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனை ஜாதி பெயரை சொல்லி அழைத்து தீயில் தள்ளிவிட்ட மாற்று சமுதாய மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை அருகிலுள்ள காட்டுச்சிவிரி கிரா மத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரு டைய மகன் சுந்தர்ராஜ் (11) அதே ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கள் கிழமை மாலை 4.30 மணியளவில் மாணவர் சுந்தர்ராஜ் தன்னுடைய வீட்டில் இருந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்கு நடந்து சென் றுள்ளார். அப்போது அங்குள்ள ஈமகிரியை கொட்டகை அருகே நின்றிருந்த அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பால முருகன், திவாகர், கிஷோர் ஆகிய மூன்று பேர் சுந்தர்ராஜை ஜாதி பெயரை கூறி அழைத்துள்ளனர், மேலும் அருகில் சென்ற சுந்தர் ராஜை திடீரென அருகில் எரிந்து கொண்டிருந்த தீயில் தள்ளி உள்ளனர், இதில் சுந்தர்ராஜின் சட்டை தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் சுந்தர்ராஜ் உடலை நனைத் துள்ளார். இதனால் மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுந்தர்ராஜ் தாய் அஞ்சலை தீக்காயம் குறித்து கேட்டபோது, தீயில் தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். பின்னர் சுந்தர்ராஜை மனம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச் சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் அனு மதித்தனர்.
இதை அறிந்த சுந்தர்ராஜ் தந்தை கன் னியப்பன் சுந்தர்ராஜிடம் விசாரித்துள்ளார், அப்போது மாணவர்கள் மூவரும் சேர்ந்து தீயில் தள்ளியதை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மாணவர்கள் பாலமுருகன் (13), திவாகர் (12), கிஷோர் (11) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியப்பன் வெள்ளி மேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப் பட்ட மாணவன் சுந்தர்ராஜ் கூறுகையில்,
நான் நடந்து சென்று கொண்டிருந்த போது பால முருகன், திவாகர், கிஷோர் ஆகிய மூவரும் தன்னை ஜாதிப் பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், அருகில் சென்றவுடன் தீயில் தள்ளி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளிக்கூடத்தில் தன்னை ஜாதிப் பெயரை கூறி அழைப் பதாகவும், அடிப்பதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மாணவன் ஜாதி ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வுமேலோங்கி வருவது கவலை யளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.
No comments:
Post a Comment