ரூ.1000 உதவித் தொகை - அரசுப் பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்க இணையதளம், அலைபேசி செயலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

ரூ.1000 உதவித் தொகை - அரசுப் பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்க இணையதளம், அலைபேசி செயலி

சென்னை,ஜூன்6- தமிழ்நாடு அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டமானது உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது அய்டிஅய்யில் சேர்ந்து படிக்கும்போது மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 6 லட்சம் மாண விகள் பயனடைவார்கள் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இதனால் பயனாளி களை இறுதிசெய்வதற்காக, மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் பட்டியல் தயா ரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதிபெற்ற மாணவிகள் இணையத்தின் வாயிலாகவே விண்ணப் பித்திட இணையதளம், அலைபேசி செயலி உருவாக்கும் பணிகளும் நடை பெற்று வருவதாகவும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளின் விவரங் களை பள்ளிக்கல்வித் துறையிடம் பெறப்பட்டுவிட்டதாகவும் உயர்கல்வித் துறையை பொறுத்தவரை கல்லூரிகளில் தனித்தனியாக விவரங்கள் பராமரிக்கப் படுவதால், மாணவிகளின் விவரங்களை விரைவாக பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறுகின்றனர். இருப்பினும், உயர் கல்வித் துறை மூலமாக மாணவிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக கூறும் அதி காரிகள், இத்திட்டத்தில் பயன்பெற, மாணவிகள் விண்ணப்பிக்க தனி இணையதளம், அலைபேசி செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது என்றனர்.  இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறவும் தயாராக இருப்பதாகவும் அதே போல், வேறு ஏதாவது பிற உதவித் தொகைகளை மாணவிகள் பெற்று வந்தாலும், இத்திட்டத்திற்கு விண்ணப் பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment