சென்னை, ஜூன் 06 மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் எனக் கருநாடக அரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருநாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மும்முரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வரும் நீராதாரம் பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாட் டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தும் கருநாடக பாஜக அரசு அணை கட்டு வதில் மும்முரமாக உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இது குறித்து செய்தி யாளர்களிடம் கூறுகையில்,
“காவிரியின் குறுக்கே தமிழ்நாடு எல்லையில் இருந்து4 கி.மீ. தொலைவில், மேகதாது அணையைக் கட்ட கரு நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் வருவது இந்த அணையால் தடைபட்டு, டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும்.
கருநாடகா அரசு அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கையை அளித்தபோது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கருத்துகளைக் கேட் டாமல், ஒன்றிய நீர்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது.
காவிரி ஆறு கருநாடகாவில் 320 கி.மீ. தூரம் பாய்கிறது. தமிழ்நாட்டில் 416 கி.மீ. தூரம் பாய்கிறது. ஆகவே, தமிழ்நாட்டுக்குத்தான் உரிமை அதிகம். எனவே இந்த விவகாரத்தில் கருநாடக அரசு சுமூக தீர்வு காணாவிட்டால், அடுத்த 15 நாட்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment