ஆறு, குளங்களில் சிறுவர்கள் குளிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

ஆறு, குளங்களில் சிறுவர்கள் குளிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, ஜூன்.6 ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தின்கீழ் அருங்குணம் கிராமத்திலுள்ள கெடி லம் ஆற்றங்கரையில் நேற்று (ஜூன் 05) 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு நம் அனைவருக்கும் மிகுந்த மனவே தனையை அளித்தது.

ஆறு, ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தீரா துயரில் ஆழ்ந்துவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அது மட்டுமின்றி, இத்தகைய உயிரிழப்புகள் நம் சமுதாயத்திற்கும், ஒரு பேரிழப்பாக அமைந்து விடுகிறது. 

எனவே, இதில் நாம் அனைவரும் தீவிர அக்கறையும் கவனமும் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் சில முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, கிரா மப்புறப்பகுதிகளில் உள்ள நீர்நிலை களில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளை ஞர்கள் குளிக்கச்செல்லும் போது, பெற்றோர் அல்லது பெரியோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளைப் பயன்படுத் துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள் கிறேன். 

“வந்தபின் தவிப்பதை விட வருமுன் காப்பது மேல்” என்பதை நாம் அறிவோம். இது போன்ற துயர நிகழ் வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு சமுதாயத்தில் உள்ள ஒவ் வொருவருக்கும் பங்குண்டு.குறிப்பாக, ஆறுகள், குளங்கள் உள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும் பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், காவல் துறையினர், அனைவரும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்து களை எடுத்துச்சொல்வதோடு, அவ் வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கி, பொது மக்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கிச் சொல்லவேண்டும் என்றும் இந்த தரு ணத்தில் அன்போடும், அக்கறையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்பு களையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித் துறையும் மேற்கொள்ள வேண்டுமென் றும் கேட்டுக்கொள்கிறேன். 

வாழ வேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனை வரும் ஒன்றிணைந்து செயல்படு வோம் என உறுதி ஏற்குமாறும் உங்கள் ஒவ் வொரு வரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment