இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி நீட்டிப்பு! : வெளியானது அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி நீட்டிப்பு! : வெளியானது அரசாணை

 புதுடில்லி, ஜூன் 27- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி 2026 ஆம் வருடம் மார்ச் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியுடன் "ஜி. எஸ்.டி காம்பன்சேஷன்" செஸ் என அழைக்கப்படும் இந்த கூடுதல் வரி ரத்து செய்யப்படும் என நிர் ணயிக்கப்பட்ட இருந்த நிலையில், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண் டுகளில் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், மார்ச் 2026 வரை கூடுதல் வரி வசூலிப்பு தொடரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் ஒன்றிய அரசு 86,912 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு அளித்தது.

ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரியை மார்ச் 2026 வரை அமல் படுத்த ஏற்கனவே ஜிஎஸ்டி கவுன் சில் அனுமதி அளித்துள்ளது. அதன்படியே இந்த வரி மேலும் நான்கு ஆண்டுகளுக்கு வசூலிக்கப் படும் என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்திருந் தார். இந்த முடிவை அமல்படுத்தும் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

சிகரெட், சுருட்டு, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட் கள்; மோட்டார் வாகனங்கள், குளிர்பானங்கள் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது ஜிஎஸ்டி நஷ்ட ஈடு கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. சில புகையிலை பொருட்கள் மீது 290 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வரிவதிப்பு முறை அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு வருடமும் 14 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் அப்படி அதிகரிக்கா விட்டால் இழப்பீடுஅளிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2017ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் 2022ஆம் வருடம் ஜூன் மாதம் வரை ஜிஎஸ்டி நஷ்ட ஈடு கூடுதல் வரி வசூலிக்கப்படும் எனவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

ஜிஎஸ்டி நஷ்டயீடு செஸ் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையிலி ருந்து ஒன்றிய அரசு ஒவ்வொரு வருடமும் நிர்ணயித்ததை விட குறைவாக வரி பங்கு கிடைத்த மாநிலங்களுக்கு இழப்பீடுஅளித்து வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலை யில் கரோனா வைரஸ் பெருஞ்தொற்று மற்றும் அதனால் ஏற் பட்ட பொது முடக்கம் காரண மாக, ஜிஎஸ்டி வரி வசூல் பெரு மளவு சரிந்தது. ஆகவே மாநிலங் களுக்கு அளிக்கவண்டிய நஷ்ட ஈடு தொகை கணிசமாக உயர்ந்தது. இழப்பீடுசெஸ் வசூல் மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடுஅளிக்க முடியாத சூழலில், ஒன்றிய அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மாநில அரசுகளுக்கு இழப்பீடுஅளித்துள்ளது.

2020ஆம் வருடத்திற்கான 1.59 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2021ஆம் வருடத்திறகான 1.10 லட் சம் கோடி ரூபாய் கடன் பெற்று நஷ்ட ஈடு வழங்கி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் மற்றும் இதற்கான வட்டியை திரும்ப செலுத்த ஜிஎஸ்டி நஷ்ட ஈடு செஸ் வசூல் 2020 ஆம் ஆண்டு வரை நீட்டிக் கப்பட்டுள்ளது என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இழப் பீடு மேலும் சில வருடங்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் எனவும் பல மாநிலங்கள் கோரிக்கை வைத் துள்ள நிலையில், அடுத்த வாரம் சண்டிகர் நகரத்தில் ஜிஎஸ்டி கவுன் சில் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் நஷ்ட ஈடு தொடர்பான விவகாரங்கள் மற்றும் கைத்தறி ஜவுளி உள்ளிட்ட 113 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment