அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ஏன் ? : வருண்காந்தி காட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ஏன் ? : வருண்காந்தி காட்டம்

புதுடில்லி, ஜூன்.27 அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப் படும் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எதற்கு ? என்று வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

ஜூன் 14 ஆம் தேதி அறிவிக்கப் பட்ட அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நான்காண்டுகள் ஒப்பந்தம் முடிந்ததும் 11.70 லட்ச ரூபாய் சேவா நிதியாக வழங்கப்பட்டு 75 சதவீதம் பேருக்கு ஓய்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுஇந்த நிலையில், இந்த திட்டம் குறித்து தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் வருண் காந்தி   “நாட் டுக்காக பணிபுரியும் அக்னிவீரர் களுக்கு ஓய்வூதியம் இல்லையென் றால் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு மட்டும் ஓய்வூதியம் எதற்கு?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அக்னிவீரர்களுக்கு ஓய்வூ தியம் இல்லையென்றால் எனது ஓய்வூதியத்தை விட்டுத்தர நான் தயார். அக்னிவீரர்களுக்கு ஓய்வூதி யம் வழங்க நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தர மாட்டார்களா? என்றும் கேட்டுள் ளார். 

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒலித் திருக்கும் வருண் காந்தி யின் குரல் பா.ஜ.க..வில் உள்ள அதிருப்தி யாளர்களின் குரலாகவே பார்க்கப் படுகிறது

No comments:

Post a Comment