திருப்புவனம், ஜூன் 5 கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொடங் கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட் டம், திருப்புவனம் அருகே கீழடி யில் 8ஆம் கட்ட அகழாய்வை தமிழ் நாடு தொல்லியல் துறை மேற் கொண்டு வருகிறது. பிப்.13 ஆம் தேதி தொடங்கிய அகழாய் வில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதில் நீள் வடிவ தாயக்கட்டை, பாசி, சுடுமண் காதணிகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கீழடியில் அய்ந்து குழிகள், அகரம், கொந்த கையில் தலா 2 குழிகள் தோண் டப்பட்டு பணிகள் நடந்து வரு கின்றன. அகழாய்வு பணிக்காக தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நான்கு மீட்டர் நீள, அகலத்தில் குழிகள் தோண் டப்படும். குறிப்பிட்ட ஆழத்தில் ஆற்று மணல் அடுக்கு வெளிப் பட்டால் அகழாய்வு பணிகளை நிறுத்தி விட்டு கூடுதல் குழிகள் தோண்டப்படுவது வழக்கம். கீழடி, அகரத்தில் இதுவரை தோண்டப் பட்ட மொத்தம் 7 குழிகளில் மண் அடுக்கு உறை கிணறுகள் வெளிப் பட்டதை தொடர்ந்து இரண்டு தளங்களிலும் கூடுதலாக தலா இரண்டு குழிகள் தோண்டும் பணி நேற்று (4.6.2022) தொடங்கி யுள்ளது. வரும் செப்டம்பர் வரை பணிகள் நடைபெற உள்ள நிலை யில், இன்னமும் கூடுதலாக குழிகள் ஆய்வு பணிக்காக தோண்டப் படுமென தெரிகிறது.
No comments:
Post a Comment