ஒசூரில் 11ஆவது ஆண்டு புத்தக திருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

ஒசூரில் 11ஆவது ஆண்டு புத்தக திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 11 ஆவது ஆண்டு புத்தக திருவிழாவை ஒசூரில் மூக்கொண்டபள்ளி கில்ஸ் ஓட்டலில் 100 அரங்குகளுடன் நேற்று (8.7.2022) மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ்,தே.மதியழகன் ஆகியோர் திறந்து வைத்தனர். .அரங்கு எண்:35இல் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அமைத்துள்ள புத்தக கடையை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி துணைமேயர் சி.ஆனந்தையா திறந்து வைத்தார். உடன் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பேராசியர் கு.வணங்காமுடி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி, திராவிட மகளிர் பாசறை மாவட்ட தலைவர் கோ.கண்மணி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment