ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு 17.07.2022 அன்று பெரம்பூர் வீனஸ் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நா.பார்த்தீபன் தலைமையில் கடைவீதி பிரச்சாரத்தினை பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.பார்த்தீபன், இனநலம், தொண்டறம், நதியா, சிற்றரசு, வேலவன் ஆகியோர் பங்கேற்றனர்.
16.07.2022 அன்று மாலை உரத்தநாடு நகரத்தில் நகர இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன் தலைமையில் ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைசெயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தார். ஒன்றிய துணைச்செயலாளர் சுப்பிரமணியன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், கண்ணந்தங்குடி இளைஞரணி தலைவர் இராஜதுரை, நகர துணை தலைவர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். வணிக பெருமக்கள் அன்புடன் வரவேற்று நன்கொடை வழங்கி பேராதரவு தந்தனர்.
ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு 16.07.2022 அன்று பொள்ளாச்சியில் மாநாட்டு விளக்க துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கடை வீதி வசூல் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ. பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மு.ராகுலன், பொதுக்குழு உறுப்பினர் பொள்ளாச்சி தி.பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் சி.மாரிமுத்து, மண்டல மாணவர் கழக செயலாளர் வெ. யாழினி, நகர தலைவர் க.வீரமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கு.கார்த்திக், நகர இளைஞரணி அமைப்பாளர் ம.பிரவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்னிலம் ஒன்றியம் ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நன்னிலம் பெரியார் நற்பணி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆனைக்குப்பம் சசிகாந்த் நினைவு அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு ரூபாய் பத்தாயிரத்தை ஆனைக்குப்பம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி வழங்கினார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தட்டாத்திமூலை சிவ.ருக்மணி அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு ரூபாய் ஆறாயிரத்தை தட்டாத்திமூலை சிவ.அசோக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெரியார் நற்பணி இயக்க துணைத் தலைவர் தன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தருமபுரி மாவட்ட இளைஞரணி சார்பில் பொம்மிடியில் மாநாட்டுக்கான கடைவீதி பரப்புரைப் பணி மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. வெதரம்பட்டி இளைஞரணி பு.வினோத்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.பூபதி ராஜா, நகர அமைப்பாளர் கண்.இராமச்சந்திரன், மாணவர் கழகம் சக்திவேல், இளைஞரணி மாநில துணை செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.





No comments:
Post a Comment