பெரியார் அமைப்புச்சாரா கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் கிளை தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

பெரியார் அமைப்புச்சாரா கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் கிளை தொடக்கம்

திருப்பத்தூர், ஜூலை 20-- திருப் பத்தூர் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் 10.7.2022 அன்று மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் தலை மையில் பெரியார் அமைப் புச்சாரா கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்  கிளை தொடங் கப்பட்டது. இதற்கு  வி. ஆனந்தன், கே.பன்னீர், கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல வாரியத்தில் உறுப்பி னராக  பதிவு செய்து கொண் டால் என்னென்ன உதவி களை அரசாங்கத்திடமி ருந்து பெறலாமென்று, திராவிடர் தொழிலா ரணி மாநில தலைவர். திருச்சி மு. சேகர் மற்றும் தஞ்சை இரா. பெரியார் செல்வன், அண்ணா.சர வணன் ஆகியோர் விளக்கி சிறப் புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 300 தொழிலாளர் கள் பங்குபெற்று தங் களை உறுப்பினர்களாக பதிவு செய்ய பெயர்களை பதிவு செய்து கொண்ட னர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், அகிலா ஆகி யோரின் இணையேற்பு நாள் நிகழ்ச்சியும் மத்தூர் மகளிரணித் தலைவர் இந் திரா காந்தி அவர்களின் பிறந்த நாள்  நிகழ்ச்சியும் கழக தோழர்களால் மிக சிறப்பாக நடைபெற்றது. 

மதியம்  தோழர்கள் அனைவருக்கும் விருந்து மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் வழங்கினார்.

No comments:

Post a Comment