புதுக்கோட்டை மேனாள் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், 17 வயது முதல் 93 வயது வரையிலும் இயக்கப்பணியில் ஆர்வத் தோடு செயல்பட்டு வந்த வரும், இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவருமான மானமிகு இர.புட்பநாதன் நேற்று (19.7.2022) மாலை மறைவுற்றார் என்ற தகவலை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
நாகர்கோயில் முதல் சென்னை வரை நான் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் போது, பார்வையாளராக அவர் அமர்ந்திருந்ததைக் கண்டு மேடையில் இருந்து இறங்கி, அந்த முதுபெரும் பெரியார் தொண்டருக்குச் சால்வை அணிவித்து மரியாதை செய்தேன்.
கிறித்துவ மதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எந்தவித மதச் சடங்கிலும் ஈடுபடாமல் இறுதி மூச்சு அடங்கும் வரை இயக்கப்பணி ஆற்றி, சுயமரியாதைச் சுடரொளியாகி விட்ட மானமிகு இர.புட்பநாதன் அவர்களின் அருந்தொண்டை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
அவர் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், நண்பர்களுக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநிலக் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் கழகத்தின் சார்பில் இறுதிமரியாதை செலுத்தினர்.

No comments:
Post a Comment