முதுபெரும் பெரியார் தொண்டர் இர.புட்பநாதன் மறைந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

முதுபெரும் பெரியார் தொண்டர் இர.புட்பநாதன் மறைந்தார்

புதுக்கோட்டை, ஜூலை 20- புதுக்கோட்டையில் வாழ்ந்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் அவர்கள் 19.07.2022 அன்று மாலை 4.30-மணி அளவில் மறைவுற்றார்.

இவருடைய வாழ்விணையர் இன்னாசியம்மாள் சில காலங்களுக்கு முன் மறைந்து விட்டார். இவருக்கு நான்கு ஆண்மக்கள், இரு பெண்மக்கள் என ஆறுபேர் ஆவர். அவர்களில் இரண்டாவது வாரிசான வளர்மதியும் அண்மையில் மறைந்து விட்டார். மற்ற வர்களான ரபேல்ராஜ், ரீத்தா என்ற மகளும், பாஸ்கர், ஆம்ஸ்ட்ராங், ஜவகர் ஆகிய அய்ந்து பேரும் உள்ளனர்.

20.05.1930- அன்று புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை எனும் சிற்றூ ரில் இரபேல் - அடைக்கலமேரி ஆகிய இணையருக்கு தலைமகனாக பிறந்த இர.புட்பநாதன் அவர்கள் 93-வயதான நிலையில் மறைந்து விட்டார்.

அவரைப் பற்றிய குறிப்புகள்: அவர் 17வயதுவரை கிராமச் சூழலில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது 17-ஆம் வயதில் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1947-ஆம் ஆண்டு புதுக்கோட்டை தில கர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பரப்புரைக் கூட்டத்தில் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களது உரைவீச்சைக் கேட்டு தந்தை பெரியா ரின் கொள்கை வயப்பட்டார். அது முதல் கழகத் தோழர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கொள்கை வீர ராக மாற்றிக் கொண்டார்.

1954-ஆம் ஆண்டு நடந்த  தொடர் வண்டி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் புதுக்கோட்டை நகர தலைவர் பாலை யவனம் சின்னராசா தங்கவேலு தலை மையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். 

அதன் பிறகு தந்தை பெரியாரின் ஆணையை ஏற்று 1957-ஆம் ஆண்டு பிராமனாள் உணவகப் பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தில் புதுக்கோட் டையில் பங்கெடுத்துக் கொண்டார். அவர் செய்து வந்த பட்டிகைக் கல் தொழிலில் படிக்கல், கல்தூண் போன்ற வற்றை விற்று வாங்கும் விதமாக தேவ கோட்டைக்கு 1970-ஆண்டில் குடும்பத் துடன் சென்றிருக்கிறார். அங்கு தொழில் மட்டுமல்லாது இயக்கப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டார். அதனால் 1975-ஆம் ஆண்டில் தேவகோட்டை திராவி டர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். 

அங்கிருந்து மீண்டும் புதுக் கோட்டைக்கு 1981-ஆம் ஆண்டில் வந்த பிறகு தொழில் மட்டுமல்லாது கழகப் பணியையும் செம்மையாகச் செய்து வந்தார். அதன் விளைவாக 1983-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை நகர திரா விடர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டு 12 ஆண்டுகள் பணியாற்றி வந் தார். 1983-ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் அறிவித்த அத்தனை போராட் டங்களிலும் சிறையும் சென்று வந் திருக்கிறார். 

இவர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக இருந்த காலத்தில் தமிழ்நாடே வியந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இளைஞரணி மாநாட்டை புதுக்கோட்டையில் நடத்தி ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுத்து சிறப்பிக்கும் நிகழ்வையும் நிகழ்த்திக் காட்டியிருக் கிறார். டில்லி பெரியார் மய்யத்திற்காக 35-கிராம்வரை தங்கம் சேகரித்து வழங் கியதோடு டில்லியில் நடந்த திறப்பு விழாவிற்கும் சென்று வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினராகவும் தற்போதுவரை கழ கக் காப்பாளராகவும் தலைமைக் கழகத் தால் அறிவிக்கப் பட்டு செயலாற்றி வந்தார். இவர் 'தனது இறுதி மூச்சுவரை கருப்புச் சட்டைக்காரனாக - பெரியார் தொண்டனாக இருந்துதான் சாவேன்' என்ற மரண சாசனத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். 

இறுதி நிகழ்வு 20.07.2022 புதன் கிழமை நன்பகல் 12-மணிக்கு புதுக் கோட்டையில் மச்சுவாடி பாலாஜி நகர் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

No comments:

Post a Comment