சென்னை, ஜூலை 26 உலக அய்.வி.எஃப். தினத்தை (World IVF Day) முன்னிட்டு, சென்னையில் உள்ள ஒயாசிஸ் கருத்தரிப்பு மய்யம் ஆன்ட்ரோலைப் என்னும் ஆண்களுக்கான சிறப்பு கருத்தரிப்பு கிளினிக்கை தொடங்கியுள்ளது.
ஒயாசிஸ் கருத்தரிப்பு மய்யத்தைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அபர்ணா விஷ்வாகிரண் , கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் டி. மகேஸ்வரி, ஆணினவியல் ஆலோ சகர் டாக்டர் சி. தேவ் கிருஷ்ணா ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
இது குறித்து ஒ கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அபர்ணா விஷ்மாகிரண் கூறுகையில், “ஆண் களுக் கென தனியாக ஆண்ட்ரோலைப் சிகிச்சை மய்யத்தைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடை கிறோம். பெரும் பாலான ஆண்கள் தங்களின் கரு குறித்த மதிப்பீட்டைச் செய்ய முன்வருவதில்லை. இது தொடர்பாக சமூக ரீதியில் காணப்படும் பழக்க வழக்கங்களும், போதிய புரிதல் இல்லாததுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும். பன்னாட்டு அய்.வி.எஃப். தினத்தை முன்னிட்டு சிறப்பு முயற்சியாக ‘கருத்தரிப்பு பரிசோதனைக்கு பாலின பேதம் கிடையாது’ என்பதை உணர்த்தும் விதமாக ஆண்களுக்கென சிறப்பு சோதனை மய்யத்தைத் தொடங்கியுள்ளோம். அதாவது திருமணமாகி ஓராண் டாகியும் குழந்தை பேரு கிடைக்கவில்லை என்றால் கணவன், மனைவி இருவரும் கருத்தரிப்பு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்” என்றார்.
No comments:
Post a Comment