சிதம்பரம் மாவட்ட சந்தா சேர்ப்பு நிகழ்வில் மாவட்ட மேனாள் அமைப்பாளர் கு.தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.ஜெயபால், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் எம்.மனோகர், பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் முத்துபெருமாள், பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் சங்கர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முகம்மது யூனுஸ், ஆதிவராகநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் விடுதலை சந்தாக்களை அளித்தனர்.
ஆவடி கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சு. இராஜேந்திரன் அரையாண்டு சந்தாவை மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலிடம் வழங்கினார்.தருமபுரி, பி.கொல்லபட்டி பெரியார் பெருந்தொண்டர் மேனாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் நல்.கோபால் அவர்கள் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர்கள் புலவர் இரா.வேட்ராயன், இ.மாதன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், பாப்பாரபட்டி நகர தலைவர் ம.சுந்தரம், ஆகியோர் உள்ளனர்.
தருமபுரி மாவட்ட தலைவர் வீ. சிவாஜியிடம் மருத்துவர் இரா.அசோக் ராம்குமார் ஓராண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.2000 வழங்கினார். உடன் விடுதலை வாசகர் வட்ட தலைவர் க. சின்னராஜ் உள்ளனர்.
தி.மு.கழகம் 123 ஆவது மேனாள் வட்டச் செயலாளர் மதுரை முத்து, மயிலை பகுதி கழக தோழர் இரா. மாரிமுத்துவிடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
குமரி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம், நாகர்கோவில் மாநகர பகுதியைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் பாக்கியராஜ், குமரி மாவட்ட திமுக வர்த்தகர் அணி பொறுப்பாளர் இளஞ்செழியன் ஆகியோர் விடுதலை சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினர். உடன்: குமரி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் ச.அலெக்சாண்டர்.
ஓமலூர் ப.செல்லதுரை திமுக, சுகுணா கோழிக் கடை உரிமையாளர் எஸ்.ஜெயராமன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் அரையாண்டு விடுதலை சந்தாக்களை ஓமலூர் சவுந்தரராசனிடம் வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வில் எல்லாபுரம் ஒன்றிய அமைப்பாளர் அருணகிரி மற்றும் இளைஞரணி கலைவேந்தன் ஆகியோர் சந்தா சேர்த்தனர். இதில் மின்சார துறை ஊழியர் கா. மகாலிங்கம், மருத்துவர் எல்லா
புரம் கோட்டீஸ்வரராவ் ஆகியோர் அரையாண்டு சந்தாக்களை வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட, மீஞ்சூர் ஒன்றிய பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் கழக அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் பொன்னேரி நகர தலைவர் வே.அருள் முன்னிலையில் சந்தா சேர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. பொன்னேரி சித்ரா ரகுபதி, ஏலியம்பேடு ஊராட்சி செயலர் த.நவமணி ஆகியோர் அரையாண்டு சந்தாக்களும், தி.மு.க அரசு வழக்குரைஞர் தேவேந்திரன் ஓராண்டு சந்தாவையும் வழங்கினர். உடன் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ. முருகன், மற்றும் பொன்னேரி நகர செயலாளர் மு. சுதாகர், இளைஞரணி அமைப்பாளர் க.கார்த்திகேயன்.
பொன்னேரி நகர கழகம் சார்பில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் பொன்னேரி நகர தலைவர் வே.அருள் முன்னிலையில் சந்தா சேர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் தி.மு.க மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சுகுமார் ஓராண்டு சந்தாவும், மூர்த்தி-சிறுபுழல் பேட்டை, ஊராட்சி செயலர் மூர்த்தி, 3 ஓராண்டு சந்தாக்களையும், கவரைப்பேட்டை தி.மு.க. மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.இ.திருமலை 3 ஓராண்டு சந்தாக்களையும், பொன்னேரி வழக்குரைஞர் பொன்செல்வன் ஓராண்டு சந்தாவையும் வழங்கினர். உடன் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ. முருகன் மற்றும் பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர், இளைஞரணி அமைப்பாளர் க.கார்த்திகேயன்.பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் குழு உறுப்பினரும், பெரியார் பெருந்தொண்டருமான மயிலை நா. கிருஷ்ணன், விடுதலை நாளிதழுக்கு 5 ஆண்டு சந்தாவும், அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு நிதியும், மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார் ஆகியோரிடம் வழங்கினார்.





No comments:
Post a Comment