படம் 1: தி.மு.க. 172 ஆவது வட்ட துணைச்செயலாளர் உ.திருவேங்கடம், மா.மணிவண்ணன், ஆர். கமலாகர் ஆகியோர் தலா ஒரு ஆண்டு விடுதலை சந்தா வீதம் மொத்தம் மூன்று விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 6,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். முன்னதாக தோழர் கவுதமன் அவர்களால் தொகுக்கப்பட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்பட்ட, “நான் சொன்னால் உனக்கு ஏன், கோபம் வரவேண்டும்?” எனும் புத்தகத்தின் 5 தொகுதிகளை, மா. மணிவண்ணன் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு ஆசிரியரிடம் வழங்கி மகிழ்ந்தார். சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜெயராமன், வேலூர் பாண்டு ஆகியோர் உடனிருந்தனர். படம் 2: ஆவடி மாவட்டம் சார்பில் இரண்டாவது தவணையாக 28 முழு ஆண்டு, 21 அரை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 69,600 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாவட்டச் செயலாளர் க. இளவரசன் வழங்கினார். ஏற்கனவே 2 அரையாண்டு, 6 முழு ஆண்டு சந்தாக்கள் முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளன. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாவட்டத் துணைத்தலைவர் பட்டாபிராம் வேல்முருகன், ஆவடி பகுதித் தலைவர் அருள்தாஸ் (எ) இரணியன் ஆகியோர் உடனிருந்தனர்.. படம் 3: சோழிங்கநல்லூர் மவட்டம் சார்பில், வேளச்சேரியைச் சேர்ந்த பி. ஹரிகிருஷ்ணன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூபாய் 2,000, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் 5 ஆண்டு விடுதலை சந்தா ரூபாய் 10,000, ஆர்.கே.இண்டர்நேசனல் நிறுவனம் சார்பில் 2 ஆண்டு சந்தா ரூபாய் 4000, மணிகண்டன் அரையாண்டு சந்தா ரூபாய் 1000, பி. செந்தில்குமார் அரையாண்டு சந்தா ரூபாய் 1000, என். ஞானசேகரன் அரையாண்டு சந்தா ரூபாய் 1000, எம். திருமதி கல்கண்டு அரையாண்டு சந்தா ரூபாய் 1000, கே. கண்ணப்பன் அரையாண்டு சந்தா ரூபாய் 1000, ஒரு ஆண்டு சந்தா எ. ரங்கநாதன் ஒரு ஆண்டு சந்தா ரூபாய் 2000, என மொத்தம் 23,000அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன், மாவட்ட ப.க. செயலாளர் ஆனந்தன், சோழிங்கநல்லூர் ப.க.தலைவர் ஜெயராமன், மாவட்ட துணைச்செயலாளர் பாண்டு, மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 25-07-2022) படம் 4: உயர்நீதிமன்ற வழக்குரைஞர் க. நடராஜன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்ததன் மகிழ்வாக ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினர். உடன்: வழக்குரைஞர்கள் தளபதி பாண்டியன், தமிழன்பன், கிருஷ்ணா. (பெரியார் திடல், 25-07-2022).
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விடுதலை நாளிதழ் அய்ந்து ஆண்டு சந்தாக்களை புதுக்கோட்டை கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளியிடம் வழங்கினார். உளுந்தூர்பேட்டை, திருச்சி பிரதான சாலை, உண்ணாமலை டிரேடர்ஸ் க.கார்த்திகேயராஜிடமிருந்து கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் அரையாண்டு விடுதலைச் சந்தா பெறுகிறார். அருகில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய கழக தலைவர் செல்வ சக்திவேல், மயிலாடுதுறை மாவட்ட கழக காப்பாளர் சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன்-வசந்தா ஜெகதீசன் இணையர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஓராண்டு விடுதலை சந்தாவினை அளித்தனர். உடன் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், மயிலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக தோழர் அண்ணாதாசன். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி ஆலம்பாளையம் பேரூராட்சி தலைவர் கார்த்தியிடமிருந்து விடுதலை சந்தா பெறப்பட்டது.கருநாடக மாநில திராவிடர்கழக செயலாளர் முல்லைக்கோ ஏழு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் கழக காப்பாளர் வி.மு.வேலு மூன்று ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் ஏ2பி மேற்பார்வையாளர் வேலூர் கு.மதன்குமார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ந.பரமசிவம் அய்ந்து ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் துணை மேயர் சாரதாதேவி 10 விடுதலை சந்தாக்களைப் பெற்றுத்தர உறுதி தெரிவித்தார். கருநாடக மாநில திமுக துணை அமைப்பாளர் மு.கருணாநிதி ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் ஏ2பி மேலாளர் குடந்தை என்.சிவசங்கரன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
பெங்களூரு பெரியார்நகர் சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை-நாகம்மாள் நினைவாக வாழ்நாள் விடுதலை சந்தாவுக்கும், வரதராசன்-வெண்மலர் இணையர் தங்களது சார்பில் வாழ்நாள் விடுதலை சந்தாவுக்கும் ரூ.40.000 வழங்கினர். திராவிட முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் சூரமங்கலம் சி.பன்னீர்செல்வம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். கருநாடக மாநில திமுக மேனாள் பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.டி. ஆனந்தராஜ் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து விடுதலை சந்தா இரசீதுகளையும் பெற்றுக் கொண்டார். திராவிடர் கழக இளைஞரணி மேனாள் துணை செயலாளர் அ.சுரேசு அய்ந்து ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் திராவிடர் கழக வழக்குரைஞரணி பொறுப்பாளர் எஸ்.குணவேந்தன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் பெரியார் பெருந்தொண்டர் வி.ரெத்தினம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன். பத்து விடுதலை சந்தா ரசீதுகளையும் பெற்றுக் கொண்டார். சேலம் மண்டல செயலாளர் ஆத்தூர் விடுதலை சந்திரன்-இராணி இணையர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன், இருபது விடுதலை சந்தா ரசீதுகளையும் பெற்றுக் கொண்டனர்.
பெங்களூருவில் பண்பாளர் ப.அருண்மொழி-உமா இணையர் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20.000 வழங்கினர். கருநாடகமாநில துணைத்தலைவர் கஜபதி இரண்டு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் கருநாடக மாநிலத்தலைவர் மு.ஜானகிராமன் பத்தாண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் சுயமரியாதைச் சுடரொளி முத்துச்செல்வன் இணையர் வசந்தா அம்மையார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். அவர்களது மகன் செம்பியன் பத்து விடுதலை சந்தா இரசீதுகளைப் பெற்றுக்கொண்டார். சேலம் மாமன்ற உறுப்பினர் சக்கரை சரவணன் மூன்று ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். பெங்களூருவில் ரமேஸ்பாபுராசா-செல்வி இணையர் வாழ்நாள் சந்தா ரூ.20,000 வழங்கினர். சேலம் வழக்குரைஞர் கவுதம பூபாலன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் மேயர் அ.இராமச்சந்திரன் 25 ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் சேலம் ஆர். தமிழரசன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் சங்கீதா சாம்ராஜ் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் ஆர்.தீபா ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் மாமன்ற மண்டலத் தலைவர் செ.உமாராணி 10 ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி ஆ.பிரபு 50 ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி. எம். செல்வகணபதி 10 ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. இராசேந்திரன் 100 ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் எஸ். ஆர்.சிவலிங்கம் 10 ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.





No comments:
Post a Comment