ஆசிரியர் அழைத்து விட்டார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

ஆசிரியர் அழைத்து விட்டார்!

அரியலூர் இளைஞரணி மாநாட்டிற்கு அணியமாகிறது விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி

தனிப் பேருந்தில் மாநாட்டிற்கு வருகை

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வரும் ஜூலை 30 அன்று இளைஞரணி மாநில மாநாடு புரட்சிமிகு எழுச்சியோடு நடைபெறவுள்ளது.

 அரியலூர் மட்டுமல்ல, அகிலமே அதிசயக்கத்தக்க வண்ணம் மாநாடு அமைய அனைவரும் திரண்டு - கடலைக் காணா அரியலூரில், கருஞ்சட்டைக் கடலைக் காட்டுங்கள்; பெரியார் என்ற பேராயுதத்தின் வலிமையை விளக்கும் வாலிபர்கள் கூட்டம் இதோ என்று மாற்றார் மருள, புரிய வைக்க வாருங்கள், சந்திப்போம்! என்று தமிழர் தலைவர் அழைத்து விட்டார். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணியினர் 100 பேர் தனிப் பேருந்தில் அரியலூர் மாநாட்டில் பங்கேற்க ஆயத்தமாகிவிட்டனர்.

தோழமையுடன்

செ.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர்

சே.பெரியார்மணி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர்

வெங்கட. இராசா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

திராவிடர் கழகம் .

No comments:

Post a Comment