அ.தி.மு.க. தலைமைக் கழகப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஓ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்தவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

அ.தி.மு.க. தலைமைக் கழகப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஓ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்தவர்கள்

சென்னை, ஜூலை 11 அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் மேனாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப் பாடி பழனிசாமியை அதிமுக இடைக் கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதர வாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதுவரை ஓ.பி.எஸ். வகித்துவந்த பொருளாளர் பொறுப்புக்கு திண்டுக் கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தலைமையகப் பூட்டை உடைத்து ஓ.பி.எஸ். தலைமையிலான வர்கள் உள்ளே நுழைந்தனர். தலைமை அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.  

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் காலை யில் கைப்பற்றிய சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை அதிகாரிகள் மூடி முத்திரை வைத்தனர். அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள் ளனர். வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது.

இது குறித்து   ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய் யப்பட்ட என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி. முனுசாமிக்கோ இல்லை. கழக சட்ட விதிகளுக்கு முரணாக என்னை நீக்குவதாக அறிவித்த அவர்களைக் கண்டிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி இருவரையும் கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்து நீக்குகிறேன்" என்று அறிவித்தார்.

அத்துடன், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நீதியைப் பெறப் போவதாக அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, பொதுக் குழுவில் பேச வந்த எடப்பாடி பழனி சாமி, "நீங்கள் விரும்பிய சில தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று பூடகமாகக் குறிப்பிட்டுத் தொடங்கினார்.

"கழகம் சிறப்படைய வேண்டும், வலிமையடைய வேண்டும். சில எட்டப்பர்கள் கட்சியில் இருந்து களங்கம் கற்பிக்கும் நிலையில், எதிரிகளோடு உறவு வைத்திருக்கும் நிலையில், அதை அழிக்கவேண்டும், ஒடுக்கவேண்டும், முறியடிக்க ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தந்தீர்கள். என்னை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளீர்கள். 1974இல் சிலுவம் பாளையம் என்ற குக்கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் அதிமுக கிளைக்கழக செயலாளராக சேர்ந்தேன்.

அப்போது நான் சேலம் வாசவி கல்லூரியில் படித்துக்கொண்டிருந் தேன். எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக-வால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் நெடுங்குளம் பகுதியில் காங்கிரஸ் வலுவாக இருந்தது. கிளைச் செயலாளராகப் பொறுப்பேற்றவுடன் நான் நட்டுச் சென்ற கொடிக்கம்பத்தை பிடுங்கி எறிந்தார்கள். மீண்டும் அங்கே கொடிக் கம்பம் நட்டேன்" என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி தாம்  படிப்படியாக கட்சியில் வளர்ந்த விதம் குறித்து விவரித்தார்.


No comments:

Post a Comment