நினைவில் வாழும் மு.க. வேலாயுதம், சாரதாம்மாள் ஆகியோரின் பெயரன், வேலூர் பாண்டு, இராதம்மாள் அவர்களின் மகன் வே. பா. அறிவன் 23ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.07.2022) முன்னிட்டு ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தாவுக்கான ரூ.2000-க்கான காசோலையினை வழங்கினார்.உடன் செயராமன், பன்னீர்செல்வம் எம்.துரைராஜ்.(பெரியார் திடல்-14.07.2022).
பாரத ஸ்டேட் வங்கியில் தலைமை காசாளராக பணி புரிந்து ஓய்வு பெற்ற எம். துரைராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தாவுக்கான ரூ 2000 -க்கான காசோலையினை வழங்கினார்.(பெரியார் திடல்-14.07.2022).
விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர் இராஜபாளையம் இல.திருப்பதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 10 ஓர் ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான நன்கொடை ரூ 18,000/- த்தினை வழங்கினார்.சிவகாசியைச் சேர்ந்த கழகத் தோழர் சுந்தரமூர்த்தி தொடங்கியிருக்கும் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அலைபேசி வாயிலாக காலகம் என்று பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக சுந்தரமூர்த்தி, விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர் இல.திருப்பதி மூலமாக விடுதலை அரையாண்டு சந்தா வழங்கினார்.
இராஜபாளையம் மீனாட்சி திரையரங்க உரிமையாளர் ஆர்.ரவிக்குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 5 விடுதலை ஓர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.9,000/-த்தினை வழங்கினார். (பெரியார் திடல்-14.07.2022)




No comments:
Post a Comment