உங்கள் ஏடு 'விடுதலை' - வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

உங்கள் ஏடு 'விடுதலை' - வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள்!

"அனைவரும் சமம்; அனைவருக்கும் அனைத்தும்; பேதமற்ற நிலையே மேலான - திருப்தியான பெரு வாழ்வு" எனும்  கொள்கையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு 95 வயது வரை உழைத்தவர் நமது தலைவர் தந்தை பெரியார்.

அவரின் இந்த மானுடக் கொள்கையைப் பரப்பும் இலட்சிய நாளேடுதான் 'விடுதலை'. விடுதலைக்கு வயது 88. இதில் 60 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றும் பேறு பெற்றவன் நான்.

'விடுதலை'யால் விளைந்த பயன்கள், பலன்கள் ஏராளம், ஏராளம் என்றா லும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், ஏற்றத் தாழ்வற்ற சரிநிகர் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும், 'விடுதலை' ஏட்டுக்கு இன்னும் பணிகள் ஏராளம் உண்டு; சமூக நீதி, சம தர்மம், சமத்துவம், ஆண் - பெண் சரிநிகர் சமம், சுயமரியாதை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜனநாயகத் திசையில் பயணிக்க வேண்டிய நிலையில் தான் நாடு இருக்கிறது - நாம் இருக்கிறோம்.

60 ஆண்டு ஆசிரியராக 'விடுதலை'யில் நான் பணியாற்றியதை யொட்டி 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களைத் திரட்டும் முயற்சியில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்கைப் பிரச்சாரத்துக்குப் பயன்படும் என்பதால் இதனை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

உங்களை நாடி வரும் தோழர்களிடத்தில் 'விடுதலை' சந்தாக்களை அளியுங்கள் - விடுதலை பெறுங்கள். விளைச்சலை அனுபவியுங்கள்.

நாளை விடுதலை நமதே!

 மிக்க நன்றியுடன், அன்புடன்

கி.வீரமணி
ஆசிரியர் 'விடுதலை'
தலைவர்,  திராவிடர் கழகம்

குறிப்பு: 'விடுதலை' ஆண்டு சந்தா ரூ.2000, 6 மாத சந்தா ரூ.1000/-


No comments:

Post a Comment