சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் பா.ஜனதா மீது சித்தராமையா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் பா.ஜனதா மீது சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஆக. 10- காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதால் சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

மேனாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான சித்தராமையா, மைசூருவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்தார். இந்த நிலையில் மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து சித்தராமையா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற பா.ஜனதா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பா.ஜனதா, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டதா?. பா.ஜனதாவினர் தேசியகொடிக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது. ஆனால் தற்போது பா.ஜனதாவினர், அரசியல் லாபத்திற்காக ‘ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றும்படி மக்களை ஏமாற்ற நாடகமாடி வருகின்றனர். தாவணகெரேயில் நடந்த சித்தராமோற்சவா விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மக்களை சென்றடைந்து உள்ளது. 

இதனால் பா.ஜனதாவினருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விழா குறித்து பா.ஜனதாவினர் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.

889 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை, ஆக. 10- மருந்தாளுநர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழ்நாடு அரசின் மருத்துவ பணியில் 889 மருந்தாளுநர்(பார்மஸ்சிஸ்ட்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இன்று (10.8.2022) முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை www.mrb.tn.gov.in இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதவிகளுக்கு கணினி வழி அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1.7.2019 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்து பதிவை வைத்திருக்க வேண்டும். மருந்தாளுநர்களுக்கு ஊதியம் ரூ.35,400-ரூ.1,12,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய அறிவுரைகள் www.mrb.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பாலியல் குற்றங்கள்

பள்ளிகளில் விழிப்புணர்வு

சென்னை, ஆக. 10- குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு நேரில் சென்று காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு, பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் மூத்தகுடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்குட்பட்ட குழந்தை களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையில் ஆர்.கே.நகர், கொருக்குப் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் உள்ள 48 பள்ளிகளில் பெண் குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் (8.8.2022) நடத்தப்பட்டது.

இம்முகாம்களில் 18 வயதுக்குஉட்பட்ட குழந்தை களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும்பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், ‘குட் டச்' மற்றும் ‘பேட் டச்' குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற் றோர்அல்லது ஆசிரியரிடம் உடனே தெரிவிப்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு முகாம்களில் 13,878 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். தேவைப் பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவிக் கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் மாணவிகளிடம் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் 

தீட்சிதர் பார்ப்பனர்களுக்குள் அடிதடி

கடலூர், ஆக. 10- சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று முன்தினம் (8.8.2022) இரவு தீட்சிதர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நடராஜர் என்கிற தர்ஷன் தீட்சிதரிடம், குறிப்பிட்ட சில தீட்சிதர்கள் மீதான எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கை திரும்பப் பெறக் கோரி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாகக் கூறப்படுகிறது.

அதற்கு, ‘நான் அந்த வழக்கை தொடரவில்லை; அது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தொடுத்த வழக்கு' என்று நடராஜர் தீட்சிதர் கூறினாராம்.

இதில் ஏற்பட்ட தகராறில் அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. நடராஜர் தீட்சிதர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா காலம் முடிந்தும், இக்கோயிலில் உள்ள கனகசபையில் யாரும் ஏறி வழிபடக்கூடாது என தீட்சி தர்கள் தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் ஷீலா என்கிற லட்சுமியை கனசபையில் ஏறி வழிபட உதவி செய்தவர் இந்த நடராஜர் தீட்சிதர் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment