நெய்வேலியில் தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

நெய்வேலியில் தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா

நெய்வேலி நகரியத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கூட்டம் 07.10.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. நகரத்தலைவர் ச.சு.இசக்கிமுத்து தலைமையில் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கடலூர் மண்டல செயலாளர் ந.தாமோதரன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், நகர இளைஞரணி பொறுப்பாளர்கள்,  வடக்குத்து கிளை தோழர்கள், நெய்வேலி நகர தி.மு.க., தொ.மு.ச. பொறுப்பாளர்கள், பொறியாளர்கள் துரைகண்ணன், வி.வெங்கடேசன், வி.அருணாசலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக நகர செயலாளர் கு.இரத்தினசபாபதி நன்றி கூறிட நிகழ்ச்சி நிறைவுற்றது.


No comments:

Post a Comment