கூடுவாஞ்சேரி நகர கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

கூடுவாஞ்சேரி நகர கலந்துரையாடல்

கூடுவாஞ்சேரி, அக். 10- கூடுவாஞ்சேரி நகர திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 9.10.2022 மாலை 5 மணியளவில் இரா.மகா லிங்கம் தலைமையில் மா.இராசு முன்னிலையில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத் தையன் மேற்பார்வையில்"இயக்க வளர்ச்சி"என்னும் பொருளில்  நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள்,டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிசம்பர் 17 திருப்பத்தூரில் நடை பெறும் முப்பெரும் விழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பது, கூடுவாஞ்சேரி பெரியார் சிலை அருகில் கழக கொடிக்  கம்பம் பெரியார் கொள்கை அறிவிப்பு பலகை வைப்பது மற்றும் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துவது என 6 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தொடர்ந்து நகர அமைப்பாளர் இரா.மகாலிங்கம்,நகர தலைவர் மு.தினேஷ்குமார்,நகர செயலாளர் சு.செங்குட்டுவன்,நகர துணைத் தலைவர் து.சேகர்,நகர துணைச் செயலாளர் ஆட்டோ கோபி ஆகி யோர் நகர பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், கூடுவாஞ்சேரி மா.இராசு,இரா.மகாலிங்கம், மு.தினேஷ்குமார்,சு.செங்குட்டு வன், து.சேகர்,தாம்பரம் சு.மோகன் ராஜ், மு.ராஜேஷ், எஸ்.ஆர்.வெங்க டேஷ், இர.கதிர்வேல், எ.எம்.ஜி. இராஜவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment