தலைவாசல் நகரில் தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

தலைவாசல் நகரில் தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா

தலைவாசல், அக். 5- ஆத்தூர் கழக மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையம் அருகே தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட தலை வர் த.வானவில் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், பெரியார் பெருந்தொண்டர் நாவை ஆர்.கிருட்டினசாமி, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ்பிரபாகரன், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலைவர் வ. முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ.அறிவு செல்வம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் பெரியேரி மாயக்கண்ணன், பகுத்தறிவு ஆசிரி யரணி மாவட்ட அமைப்பாளர் இலுப்பநத்தம் கா.பெரியசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி செயலா ளர் வினோத் குமார், மண்டல இளைஞரணி செயலாளர் ப.வேல் முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா.கார்முகிலன், ஆத்தூர் கழக தோழர் அருண், செல்வம், பெரியேரி சமூக நீதி சம்பத் மற்றும் தலைவாசல் மத்திய திமுக ஒன்றிய செயலாளர் க.பழனி சாமி, வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் , எஸ்.பி.பாலமுருகன், மதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கு.பழனிசாமி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கருத்துரை வழங்கினார். கழக பேச்சாளர் பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார். நன்றியுரை கா.பெரியசாமி கூறினார். 

No comments:

Post a Comment