பழனி, அக்.5 பழனியில் முகாமிட் டுள்ள வடமாநிலத்தவர்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
அப்போது லட்சக்கணக்கானவர்கள் பழனிக்கு வந்து செல்வார்கள். அதே போல் சபரிமலை சீசன் காலத்திலும் சபரிமலை செல்பவர்கள் பழனிக்கு வந்து செல்கின்றனர். மேற்கண்ட பழனி அடிவாரம், கிரிவீதி சாலையோரங்களில் அலங்காரப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதற்காக சாலையோர பகுதியில் புதிது புதிதாக கடைகள் தோன்றும்.
இந்த கடைகளை பெரும்பாலும் வடமாநிலத்தவரே அதிகம் தொடங்கு கின்றனர். இதற்காக அவர்கள் ஒரு மாதம் முன்னரே பழனியில் வந்து தங்குவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சபரிமலை சீசனை முன்னிட்டு தற்போது வட மாநில தொழிலாளர்கள் பழனியில் உள்ள இடும்பன் கோவில் சாலை யோரம் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர். வழக்கமாக பழனியில் முகாமிட்டுள்ள வெளிமாநிலத்தவர் களிடம் பழனி டவுன் காவல்துறை சார்பில் ஆதார் கார்டு, அடையாள அட்டை போன்றவை சோதனை செய்யப்படும். அந்தவகையில் தற்போது தங்கி உள்ள வட மாநிலத்தவர்களிடம் அடையாள அட்டை போன்ற ஆவ ணங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் திருட்டு நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே பக்தர்கள், பொதுமக்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் பழனியில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு, ஆவணங்கள் சோதனையை காவல் துறை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்தர்கள் கூடும் இடங்களில் அவர்கள் சுற்றித் திரிவதால், அவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடவும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment