தமிழ்நாட்டை நாசக் காடாக்கும் முயற்சி பிறவழிபாட்டுத்தலத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ அமைப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

தமிழ்நாட்டை நாசக் காடாக்கும் முயற்சி பிறவழிபாட்டுத்தலத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ அமைப்பினர்

கன்னியாகுமரி, அக்.5 பிற மத வழி பாட்டு நடவடிக்கை குலைக்கும் வகை யில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட ஹிந்த்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களை கன்னியாகுமரி காவல்துறை கைதுசெய்துள்ளது

புத்தளம் அருகே ஜெபக்கூட்ட த்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகியை காவல்துறை கைது செய்தனர். கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள உசரவிளையை சேர்ந் தவர் ஜெபசிங் (வயது 35). இவர் புத்தளம் அருகே உள்ள வீரபாகுபதியில் உள்ள கிறிஸ்தவ சபையில் பொருளாள ராக உள்ளார். அந்த சபையில் ஜெபக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்து முன்னணி ராஜாக்க மங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளரான அரியபெருமாள்விளையை சேர்ந்த சுரேஷ், ஒன்றிய தலைவரான ராஜாக்க மங்கலத்தை சேர்ந்த மார்த்தாண்டன், புத்தளம் பேரூராட்சி 15ஆ-வது வார்டு உறுப்பினர் வீரபாகுபதியை சேர்ந்த விஜயகல்யாணி, கண்ணன், ஜெகன், தெற்கு புத்தளத்தை சேர்ந்த மகாலிங்கம், உசரவிளையை சேர்ந்த சுடலைமணி என்ற மணி, ராமு ஆகிய 8 பேர் சேர்ந்து சபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜெபக்கூட்டம் நடத்தக் கூடாது என்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தினர்.

 இதுகுறித்து ஜெபசிங் சுசீந்திரம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சுசீந்திரம் (பொறுப்பு) ஆய்வாளர் காந்திமதி, துணை ஆய்வாளர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment