சேலம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

சேலம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பங்கேற்பு

சேலம் எஃகு ஆலையின் தற்போ தைய நிலை என்ன? முழுமையான பங்கு விற்பனை நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுவிட்டதா? என மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் (திமுக) 20.12.2022 அன்று எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் திரு.ஜோதிராதித்யா அளித்த பதிலில்,  ”நிச்சயமாக சேலம் எஃகு ஆலையின் பங்குகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் குழு மற்றும் எஃகு அமைச்சகத்தின் குழுவானது இதற்கு இணைந்து செயல்படுகிறது. உரிய தணிக்கைக்காகவும், வர்த்தக விசாரணை யில் ஈடுபடவும் எங்களது முதலீட்டாளர் களை ஆலையை பார்வையிட வைக்க முயற்சித்தோம்.. ஆனால், எதிர்பாராத விதமாக முதலீட்டாளர்களுக்கு பாதுகாப் பான சூழலை மாநில அரசால் உருவாக்க முடியவில்லை என்பதை இந்த அவையில் தெரிவிப்பதற்கு வருந்துகிறேன். எப்படியிருந்தாலும் நிதி ஒப்பந்த புள்ளிகள் மற் றும் ஏலங்கள் ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக் கப்படும் என்று நம்புகிறேன்” என பதிலளித்துள்ளார்.

சேலம் எஃகு ஆலை தனியார்மயமாக் கலை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், வருகிற 30.12.2022 அன்று காலை சேலத் தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இத்திட்டம் கைவிடப்படும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறுவதை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

சேலம் எஃகு ஆலை மட்டுமல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் பலவற் றையும் தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இது சமூக நீதிக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கவனத்திற்கு நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தற்போது 30-12-2022 அன்று சேலத் தில் நடைபெறும் சமூக இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் சேலம் எஃகு ஆலை யில் இயங்கும் ஓபிசி அமைப்பும் மற்றும் சேலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஓபிசி பிரிவினர் குறிப்பாக வங்கி, காப்பீடு கழக ஓபிசி அமைப்புகளின் தோழர்களும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

வரும் நாட்களில் இது போன்று பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் நமது அமைப்பினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு


No comments:

Post a Comment