சேலம், ஜன.5 பனைமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி பகுதியைச் சேர்ந் தவர் வசந்தகுமார் (வயது 23), பொறியாள ரான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஏற்கெனவே நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் கல்லூரியில் படிக் கும்போது, தேனி மாவட்டம் போடிநாயக் கனூரை சேர்ந்த கவுசல்யா (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் கவுசல்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1.1.2023 அன்று வசந்தகுமார்-கவுசல்யா ஆகியோர் வீட்டை விட்டு வெளி யேறினர். அவர்கள் மறுநாள் (2.1.2023) காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்புவந்தனர். பிறகு காதல் ஜோடி யினர் பெரியார் சிலை முன்பு ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு ஜாதி என்ப தால் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாக வசந்த குமார்
தெரிவித்தார்.
தந்தை பெரியார் சிலை முன்பு காதல் இணையர் திருமணம் செய்து கொண்ட தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புக் கேட்டு காதல் இணையர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவ லகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

No comments:
Post a Comment